உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218

மனக் குகை ஓவியங்கள் கர்த்தராகிய பிதா, பரமண்டலத்தின் சாளரங்களில் ஒன்றைத் திறந்து, எட்டிப் பார்த்தார். கீழே, பல யோசனைகளுக்கு அப்பால், அவர் கற்பித்த பூமண்டலமும், அதன்மீது ஊர்ந்து திரியும் சகல ஜீவராசி களும், அவர் தமது சாயையில் சிருஷ்டித்து மகிழ்ச்சியுற்ற ஆதாம் ஏவாளின் வாரிசுகளும் தென்பட்டன. ஒரு தாயின் பெருமிதத்துடன், ஒரு சிருஷ்டிகர்த்தரின் கம்பீரமகிழ்ச்சியுடன், அப் பூமண்டலத்தைக் கவனித்தார். அன்று ஏழாம் நாள். தொழிலை (விளையாட்டை?) முடித்துக் கை கழுவிவிட்டுச் சிரமபரிகாரம் செய்து கொண்டிருந்த பொழுது எந்த நிலையில் இருந்தனவோ அதே நிலையில், மனிதனைத் தவிர்த்துப் பூமண்டலத்தின் மற்றைய ஜீவராசிக ளெல்லாம், அவருக்குத் தென் பட்டன. மனிதன் மட்டிலும், ஏக்கத்தாற் குழிந்த கண்களோடு விலாவெலும்பெடுத்த கூனல் உடலை வளைத்து, நெற்றி வியர்வை நிலத்தில் சொட்டச் சொட்ட, எதையோ குகையொன்றில் வைத்து ஊதி ஊதி உருக்கிக் கொண் டிருந்தான். > பிதாவின் களங்கமற்ற நெற்றியில், கண்ணாடியில் கலந்த ஆவிபோல், சோர்வு போர்த்திய துயரக் களை தோன்றி மறைந்தது. தம் இரத்தத்தின் இரத்தமான, கனவின் கனவான், லட்சியத்தின் லட்சியமான, புதல்வனின் நினைவு தட்டியது போலும்! இன்னுமா?