உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

223

மனக் குகை ஓவியங்கள் 223 பார்த்த இடங்களில் எல்லாம் தீ நாக்கு நக்கி நிமிர் கிறது? இடியும் மின்னலும், இருளும் ஒளியும் குழம்பித் தறிகெட்டு நசிக்கின்றன. இக்குழப்பங்களையும் மீறி ஒரு சிறு குழந்தை அவனது காலடியை நோக்கி ஓடி வருகிறது. தோலாடையைத் தன் தளிர் விரல்களாற் பற்றி இழுக்கிறது. பிரான் குனிந்து பார்க்கிறான், புன்சிரிப்போடு. 14 அழிப்பதற்குச் சர்வ வல்லமை இருக்கிற தெம்பில் வந்த பூரிப்போ இது?" என்கிறது குழந்தை. "சந்தேகமா! நீதான் பார்க்கிறாயே!" என்கிறான் பரமன். "உமக்கு எல்லாவற்றையும் அழிக்க முடியும். உம்மை அழித்துக்கொள்ள முடியுமா? நீர் மட்டும் மிஞ்சுவதுதான் சூன்யம் என்று அர்த்தமா? உம்மையும் அழித்துக்கொள் ளும்படி நீர் தொழிலை நன்றாகக் கற்றுவந்த பின்பு, நெஞ் சைத் தட்டிப் பார்த்துக் கொள்ளும்!" என்று சொல்லிக் கொண்டே கருகி நசித்தது அக்குழந்தை. .