உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

துன்பக் கேணி 23 பேச்சிக்குத் தடுக்க ஆசையிருந்தாலும். சுப்பன் என்றால் பெரும் பயம். அதுவுமல்லாமல் அவன் தன் னிடம் நல்லதனமாக நடந்துகொள்ளும் பொழுது அதைக் கெடுத்துக்கொள்ள மனமில்லை. செடி மறைவில் ஒதுங்கி யிருந்தவள், அவன் ஓடிய பிறகு, மருதியிடம் சென்று பார்த்தாள். மருதிக்குப் பேச்சு மூச்சில்லை. பக்கத்திலிருந்து ஓடை யில் ஜலம் எடுத்து, அவள் முகத்தில் தெளித்து, நினைவு வரச் செய்தாள் பேச்சி. மருதிக்குப் பிரக்ஞை வந்ததும், ஒரு பெரிய இருமல். அதில் இரண்டு மூன்று துளி இரத்தமும் விழுந்தது. கைத் தாங்கலாக மருதி குடிசைக்கு செல்லப்பட்டாள். அழைத்துச் VI மருதிக்கு அதிலிருந்து எழுந்து நடக்கவும் ஜீலனற்றுப் போய்விட்டது.சில சமயம், வியாதியின் மகிமையால் சித்த சுவாதீனமற்று, குழந்தையுடன் கொஞ்சுவதுபோல், சிரித் துப் பேசிக் கொள்வாள். ' கலியாணமான ஜோரில் இருந்த முகக் களை, அப்பொழுதுதான் தோன்றும். + மறுபடியும் புத்தி தெளிந்தால் மங்கிய கண்கள் இடிந்த மனத்தின் செயலற்ற ஏக்கம் - அவள் முகத்தில் கவிந்திருக்கும். பேச்சிக்கு ஒரு யோசனை தோன்றியது. • ஊருக்கு எழுத்துப் போடணும் என்று சுப்பனிடம் சொன்னாள். வெள்ளையனுக்கு, 'இதைத் தந்தியாகப் பாவித்து வர வேண்டும்!' என்று ஒரு கார்டு எழுதப்பட்டது. அது போன நான்கு தினங்களுக்குள், புதிதாக வந்த துரைக்குக் கூலிகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்று எண்ணம் பிறந்தது. அதிலும் வியாதி யஸ்தராக இருப்பவர்களுக்குச் சம்பளத்தைக் கொடுத்து அனுப்பிவிட வேண்டும் என்பது அவரது நோக்கம்.