உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

30 புதுமைப்பித்தன் கதைகள் மருதிக்கும், வெள்ளச்சிக்கும், அவனுக்கும் போக, எல் லோரும் சேர்ந்து குடிப்பதற்கும் சிறிது மிஞ்சும்.கங் காணிச் சுப்பனுக்கு மேலதிகாரிகளிடம் தக்கபடி நடந்து கொள்ள அனுபவமும் உண்டு.. அதிலும் வெகு காலமாக இருந்துவரும் ஸ்டோர் மானேஜரின் கையாள் அவன். அவருக்கு வயது ஐம்ப துக்கு மேலாகி விட்டது. கிழவர், 'வாட்டர் பால' வாசத் தினால் பெற்ற சில வியாதிகள் உண்டு. கம்பெனி அவருக்கு இன்னும் ஒரு வருஷத்தில் உபகாரச் சம்பளம் கொடுத்து அனுப்பிவிடும். ஆனால், தமது இடத்தில் தமது பந்து ஒருவனை வைத்துவிட்டுப் போகவேண்டும் என்று அவருக்கு ஆசை. அந்தரங்கமான நோக்கம் ஒன்றும் உண்டு. தமது ஒரே: பெண்ணைச் சகோதரியின் மகனுக்குக் கொடுத்து, அவனை அங்கு கொண்டுவந்து வைத்துவிட வேண்டும். இதை நிறைவேற்றுவதற் காகவே தம் சகோதரியின் மகன் தாமோதரனை அங்கு தருவித்தார். • அப்பொழுது கம்பெனியின் முதலாளியிடமிருந்து 'வாட்டர் பாலத்'தில் ஒரு பள்ளிக்கூடம் வைக்கவேண்டும் என்று ஓர் ஆர்டர் வந்தது. கம்பெனியின் விளம்பரத்திற்கு ராமச்சந்திரன் பதில் அளித்தான். கம்பெனியும் அவனை 'வாட்டர் பாலத்தும் பள்ளிக்கூடத்தின் உபாத்தியாயராக நியமித்தது. ராமச்சந்திரன் வாட்டர் பால'த்திற்கு வந்து கொண் டிருந்த அதே பஸ்ஸில் ஸ்டோர் மானே ஜரின் மகள் மரகதம் பள்ளிக்கூட விடுமுறைக்காக வீட்டிற்கு வந்து கொண்டிருந்தாள். மரகதம் நல்ல அழகி. XI பள்ளிக்கூடம் என்பது, ஸ்டோர் மானேஜரின் வீ டிற்கு எதிற்புறத்தில் இருந்த தேக்கந் தோப்பில் ஒரு சிறு குடிசை.அதில் ஒரு மேஜை, நாற்காலி, பலகை, அதற்குப் பின்புறத்தில் ராமச்சந்திரனின் நார்க் ஒரு கரும்