உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33

துன்பக் கேணி 83 முதலில் உயிரெழுத்துக்களை வரிசையாகச் சொல்லிக் கொடுத்தான். அரை மணி நேரமாயிற்று. மரகதம்மா மாதிரிப் படிக்க எத்தனை நாளாகும்?" என்றாள் வெள்ளைச்சி. "ரொம்ப ' ஆசை இருக்கிறதுபோல் என்று சிரித்தான் ராமச்சந்திரன்.

இருக்கே? இன்றைக்கு இவ்வளவு போதும்,நாளைக்கு வா!" என்றான். "சரி!" என்று அவள் எழுந்தாள். அச்சமயம் மரகதம், 'வாத்யார் ஸார்" என்று சிரித் துக்கொண்டு, உள்ளே வந்தாள். இருவரும் தனியே இருப்பதைக் கண்டதும் சிறிது நின்றாள். என் ராமச்சந்திரன் சிரித்துக்கொண்டு, "எனது புதிய மாணவி. உன்னைப்போல் படிக்கவேண்டுமாம்!" றான். அவன் குரல் தொனியைக் கேட்டதும், மரகதத்திற் குத் தோன்றிய சந்தேகம் மறைந்தது. "வெள்ளைச்சிக்கு ஆசை ரொம்ப பொல்லாதவள்!" என்றாள் மரகதம். 'நானும் ஒங்களைப் போலப் படிக்கப் போரேன்!" என்று சொல்லிக்கொண்டே ஓடிவிட்டாள் வெள்ளைச்சி. இன்று அத்தான் வந்திருக்கிறார். வீட்டுக்கு வரு கிறீர்களா?" "நான் என்னத்திற்கு? சமைத்தது வீணாகப் போகும்!" என்றான் ராமச்சந்திரன். ஆமாம்! நாளைக்கு வேண்டுமானால் நான் செய்து தந்துவிடுகிறேன். வாருங்கள் போகலாம்!" என்றாள் மரகதம். "புதிய ஆட்கள் இருக்கும்பொழுது நான் வருவது நன்றாக இல்லை, எப்படியும் நான் அவர்களைப் பார்க்காமலா இருக்கப்போகிறேன்? நாளைக்கு வருகிறேன்!"