உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

44 புதுமைப்பித்தன் கதைகள் அசட்டுத்தனத்திற்கும் உங்கள் கந்தனின் அசட்டுத்தனத் திற்கும் ஏற்றத் தாழ்வில்லை..." என்று சிரித்தான் பைலார்க்கஸ், "சிவ! உம்மிடம் பாசத்தை வைத்தான், அதுவும் அவன் விளையாட்டுத்தான்!" என்று, தம் சம்புடத்திலிருந்த விபூதியை நெற்றியில் துலாம்பரமாக அணிந்துகொண் டார் பரதேசி. . "நாளங்காடிப் பக்கம் போகிறேன். வருகிறீரா?" என்றார் மீண்டும் அச்சந்நியாசி. ஆமாம்! அங்கே போனாலும் சாத்தனைப் பார்க்க லாம்; அவனிடம் பேசுவதில் அர்த்தமுண்டு.. அவனுக்குத் தெரியும் சிருஷ்டி ரகசியம்..." "ஓஹோ! அந்தச் சிலை செய்கிற கிழவனையா? உமக்கு ஏற்ற பைத்தியக்காரன்தான்... ஏதேது! அவனே அதோ வருகிறானே!" என்றார் சாமியார். பைலார்க்கஸ் எழுந்து அவனை எழுந்து அவனை யவன முறையில் வணங்கினான். சாத்தனுக்கு எண்பது வயதிருக்கும். தொண்டு கிழவன். ஆனால் வலிமை குன்றவில்லை; கண்களில் தீட் சண்யம் போகவில்லை. பிரமன் மனித வடிவம் பெற்றது போல் காணப்பட்டான். அவனும் கைகூப்பி வணங்கி, "பைலார்க்கஸ், உன்னைத்தான் தேடிவந்தேன்! வீட்டிற்கு வருகிறாயா? எனது லட்சியம் இன்றுதான் வடிவம் பெற்றது....!" என்று ஒரு குழந்தையின் உற்சாகத்துடன் கூவி யழைத்தான். இவரைத் தெரியுமா? பாண்டிய நாட்டு உங்கள் பர தேசி.. அவர் தத்துவங்களை எல்லாம் என்னுள் திணித் துப் பார்த்தார்......பைலார்க்கஸிடம் முடியுமா?" என்று கேலியாகச் சிரித்தான் யவனன். "சுவாமி வரணும்,இன்று என் குடிசையில் அமுது படி கழிக்கவேண்டும்," என்று பரதேசியைச் சாஷ்டாங்க மாக நமஸ்கரித்தான் சாத்தன்.