உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53

கலியாணி 53 பார்கள். தமிழ்ப் படிப்புத் தெரியும் என்று கூறுவார்கள். ஆனால் வாழ்க்கைக்கு அவசியமான உலக அநுபவம் உண்டு; 'படித்தவர்களைப்போல் அவர்கள் வடிகட்டின அசடர்கள் அல்லர். II அர்ச்சகர் சுப்புவையர், ஏறக்குறைய மெஜாரிட்டி யைக் கடந்துவிட்டவர். குழந்தை குட்டி கிடையாது. தமது 45-வது வயதில் 'மூத்தாளை' இழந்துவிட, இரண்டாவது விவாகம் செய்து கொண்டவர். இளையாள் வீட்டிற்கு வந்து சிறிது காலந்தான் ஆகிறது. அவள் சிறு குழந்தை. 16 அல்லது 17 வயதுள்ள கலியாணி, சுப்புவையரின் கிரகத்தை மங்களகரமாக்கவே. அவரது சமையற்காரி யாகக் காலம் கழித்தாள். சுப்புவையர் மன்மதனல்லர். அதுவும் 50 வயதில் ஒருவரும் மன்மதனாக இருக்க முடியாது விதி விலக்காக. ருசியான பக்ஷணங்களுடன் விருந்து சாப்பிடும் யாரும் வயிற்றை ஆலிலைபோல் ஒட்டியிருக்கச் செய்ய முடியாது. நரைத்த குடுமியுடன் பஞ்சாங்கத்திற்கு ஒத்தபடி க்ஷவரம் செய்து கொள்வதாகச் சங்கற்பமும் செய்து கொண்டால், நிச்சயமாக எவரும் மன்மதனாக இருக்க முடியாது. சுப்புவையர் சாதுப் பேர்வழி; கோயிலுண்டு, அவ ருண்டு. வேறு எந்த ஜோலியிலும் தலையிடுகிறதில்லை. வேளைக்கு வேளை நாவிற்கு ருசியாக உணவு கொடுத்து, தூங்கும்பொழுது கால் பிடித்துவிட்டு, தொந்தரவு செய் யாமலிருப்பதே மனைவியின் லட்சணம் என்று எண்ண பவர். அதிலும், ஏறக்குறைய இருபது வருடங்களாகப் பழகி, திடீரென்று தன்னை விட்டுவிட்டு இறந்து போன மூத்தாள்மீது அபாரப் பிரேமை. அவருக்கு அது பழக்க தோஷம்.அவளைப்போல் இனி யார் வரப் போகிறார்கள் என்ற சித்தாந்தத்தில், கலியாணியின் பாலிய அழகும், சிச்ருஷையும் தெரியாது போய்விட்டன. கலியாணி,- அவளும் ஏழைப் பெண்தான். உபாத்தி மைத் தொழில் பார்த்து வந்த சாமிநாத கனபாடிகளின் 4