உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

56 புதுமைப்பித்தன் கதைகள் போனதன்று. காற்றும் ஒளியும் உள்ளே எட்டிப் பார்க்கக்கூடாது என்று சங்கற்பம் செய்துகொண்ட சுப்பு வையரின் மூதாதைகளில் ஒருவரால் கட்டப்பட்டது. பகலில் இருட்டு, இரவில் குத்து விளக்கின் மங்கலான இருட்டு. சாதாரண காலத்திலேயே எதிரில் வருவது என்னவென்று உணர்கிற பழக்கமில்லாத சர்மாவுக்குப் புலப்படாமல் இவ்வளவு வெளிச்ச உதவியும் சுப்புவைய ரின் மனைவியை மறைத்துவிட்டது அதிசயமன்று. மேலும் கலியாணிக்கு அதிகமாக வெளியில் நடமாடும் பழக்கம் கிடையாது. அவள் பொந்துக்கிளி. மேலும் குளம் வாய்க் கால்களுக்குக் கருக்கலிலேயே போய் வந்துவிடுவாள். இத னால் சர்மா கலியாணியைத் தினம் சந்தித்தாலும் பார்த்தது கிடையாது. அவருக்கு அவளைப் பொறுத்தவரை, உணவு பரிமாறும் கருவளை யணிந்த கைகள் மட்டிலும் தெரியுமோ என்னவோ! IV அன்று சுந்தர சர்மா வருவதற்குச் சாயங்காலமாகி விட்டது. காலையிலேயே சென்றவர், மத்தியான்ன போஜ னத்திற்குக்கூடத் திரும்பவில்லை. வரும்பொழுது நன்றாக இருட்டிவிட்டது. வரும் வழியிலேயே குளத்தில் குளித்து விட்டு நேராகத் தமது குச்சு வீட்டிற்குச் சென்று உடை மாற்றிக்கொண்டு, சுப்புவையரின் வீட்டையடைந் தார். அன்று அவருக்குப் பசி. களை . சுப்புவையர் வெளித் திண்ணையில் உட்கார்ந்திருந்த தால் இவரைக் கண்டதும், "என்ன அய்யர்வாள் பகல்லே கூடச் சாப்பிடல்லை என்று சொன்னாளே; இப்படி யிருந்தா உடம்பு என்னத்துக்கு ஆகும்?... அடியே, சர்மா வந்திருக்கார், இலையைப் போடு! இன்னும் விளக்கை ஏன் ஏற்றி வைக்கவில்லை! நேக்குத் தெரியுமே. அவள் இருந்தா வீடு இப்படிக் கிடைக்குமா? பகவான் செயல்! என்று சொல்லிக் கொண்டே உள்ளே சென்று, குத்து விளக் கின்மேல் இருக்கும் மாடக்குழியில் தீப்பெட்டியைத் தேடினார்.