உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59

கலியாணி 59 மறுபடியும் கலியாணி எத்தனையோ தடவை வந்து பரிமாறினாள். ஆனால், ஒரு கணமாவது சர்மாவைப் பார்க்கவில்லை. ஆனால், சர்மா அவளது உள்ளத்தைத் துருவும் பார்வைகளைச் செலுத்தினார். அவை பாறை களில் பட்ட கல்லைப்போல் பயனற்றுப் போயின. 'காரணம், காரணம்?' என்று அவர் உள்ளம் அடித்துக் கொண்டது. சாப்பிட்டு விட்டுப் பேசாது நேரே தமது குச்சு அழகு வீட்டிற்குச் சென்று, தமது உள்ளத்துடன் போராடிக் கொண்டிருந்தார். அவரது உள்ளம் கலியாணி யைத் தன்னுள் ஐக்கியமாக்கியது. அவள் சர்மாவின் சைத்ரிகக் கண்களுக்குப் பல நீண்ட காவியங் களாகத் தோன்றிற்று. அன்று இரவு முழுவதும் அவர் தூங்கவில்லை; தமது கனவுகளுடன் போராடிக் கொண் டிருந்தார். அன்று சாப்பாடு முடிந்தவுடன், சுப்புவையர், வெற் றிலைச் செல்லத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, வெளியே வந்து உட்கார்ந்துகொண்டு வெற்றிலை போடலாம் என்று பெட்டியைத் திறந்தார். வெற்றிலை பாக்கு எல்லாம் இருந்தன. ஆனால் சுண்ணாம்பு மட்டும் காய்ந்து காறைக் கட்டியாக இருந்தது. 'ஜடம்!" என்று கூறிக்கொண்டே, அடியே!" என்று உள்ளே தலையை நீட்டிக்கொண்டு கூப் பிட்டார். சமையல் உள்ளில் தனது மனத்துடன் போரா டிக்கொண்டிருந்த கலியாணி, 'என்ன?' என்று கேட்டுக் கொண்டே வெளியில் வந்தாள். 社 65 அட ஜடமே! உனக்கு எத்தனை நாள் சொல்லு வது - செல்லத்தில் எல்லாம் சரியாயிருக்கிறதா வென்று பார்த்து வை இல்லையே! அர்த்த என்று? மூணாது ராத்திரியிலே யார் கொடுப்பார்கள்? போய் ஒரு துளி ஐலம் எடுத்துண்டு வா ! ஒன்னைக் கட்டிண்டு அழரதை மாரடிக்கலாம். மிருகத்தைக் கட்டிண்டு ஒரு தொலை, சீக்கிரம். அவளும் போனாள். குடியும் குடித் தனமும் - எல்லாம் சொல்ல வேண்டியதில்லை!" என்று வைதார். விட