உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61

  1. 1

கலியாணி 61 எதற்காக? உனக்குப் புத்தி வரத்தான்! என்ன சொல்லியும் ஒன்னும் உறைக்கவில்லையே! அவள் இருந் தாளே, ஒரு குறையுண்டா? எல்லாம் கணக்கா நடந்தது. கிருகலட்சுமி என்றால் அவள்தான். சொன்னால் போதுமா?" .. 'அவள், அவள். என்கிறீர்களே? நான் என்ன செய்துவிட்டேன்? இப்படித் திரும்பிப் பாருங்கோ! இப்படி யிருக்கும் பொழுது சொன்னால் கேக்கமாட் டேனோ !" 44 கையை விடு! எனக்குத் தூக்கம் வந்துடுத்து. என்னைப் படுத்தாதே!" என்று சொல்லிவிட்டுச் சுவர்ப் புறம் திரும்பிக்கொண்டு குறட்டை விடலானார். கலியாணிக்கு நெஞ்சில் சம்மட்டியால் அடித்தது போல் இருந்தது. தனது ஸ்பரிசம் சிறிதாவது அவரை மனித னாக்கவில்லையே என்றதில் ஒரு ரோஷம், சிறிது கோபமுங்கூட. அன்று முழுவதும் அவளுக்குத் தூக்கமே வரவில்லை. அவள் உள்ளம் எண்ணங்களுடன் போராடிக் கொண்டிருந்தது. அன்று முழுவதும் கலியாணிக்குத் தூக்கம் எப்படி வரும்! தூரத்திலே, எங்கிருந்தோ ஒரு வெளிச்சம் தன்னை அழைப்பதுபோல் ஓர் உணர்வு. அது தன்னை வாழ்விக்குமோ அல்லது தகித்துவிடுமோ என்ற பயம் அவளைத் தின்றுகொண்டிருந்தது. கணவர் தன்னிடம் என்ன குறை கண்டார்? ஏன் இப்படி உதாசீனமாக இருக்கவேண்டும்? அதற்குக் காரணம் தனது குறையா, அல்லது அவரது...அவருக்குக் குறை எப்படிச் சொல்ல முடியும்? இப்படியே அவள் அன்று முழுதும் தூங்கவில்லை. பாயில் படுத்துப் புரண்டுகொண்டிருந்தாள். சற்று ஒரு புறமாகப் புரண்ட சுப்புவையர் பிரக்ஞையில்லாது கையைத் தூக்கிப் போட்டார். அது அவள் மார்பில் அம்மிக் குழவி மாதிரிப் பொத்தென்று விழுந்தது. மயக்கம் கலைந்தது. பயம்! பிறகு புருஷனின் கைதான் என்ற உணர்ச்சி. அதில் ஒரு சாந்தி பிறந்தது. அந்தப்