உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

68 புதுமைப்பித்தன் கதைகள் ஏக கலியாணிக்கு இரண்டையும் காலத்தில் பிரிய மனமில்லை. வீடு, பேச்சு, சம்பிரதாயம் இதையெல்லாம் உடைக்க மனம் வரவில்லை. சுப்புவையரை ஏமாற்றவும் மனம் துணியவில்லை. இருளில் வழி தெரியாது தவிக்கும் பாதசாரி,ஏதாவது ஒன்றைத் தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானது என்று சங்கற்பித்துக்கொண்டு அதை நோக்கிச் செல்லுவதுபோல், தன் கணவர் நித்தியம் பூ ை செய்யும் கோயிலுக்குச் சென்று கலங்கிய உள்ளத் திற்குச் சாந்தியை நாடினாள். கோவில் மூலஸ்தானத்தின் இருளுக்கு இவளது மன இருள் தோற்றுவிட்டதாகத் தெரியவில்லை. மூலஸ்தானத்தின் மங்கிய தீப வொளியில் லிங்கம் தெரிவதுபோல் சர்மாவின் முகம்தான் அவள் அகத்தில் பிரதிபலித்துக்கொண்டிருந்தது. அன்று இரவு கலியாணி சுப்புவையர் பக்கத்தில் உட் கார்ந்து கால் பிடித்துக்கொண்டிருக்கும் பொழுது. அதி காலையில் எழுந்து ஆற்றிற்குச் சென்று குளித்துவிட்டு வருவதற்கு அனுமதி கேட்டாள். காரணம், சர்மாவின் மீது ஆசை யிருந்தாலும், அவரைச் சந்திக்காதிருக்க வேண்டுமென்ற நினைப்பு. " 'விடியக் காலத்தில் ஏன் நதிக்கு..." என்றார் சுப்பு வையர். குளத்தில் ஜலம் வற்றி நாற்ற மெடுக்கிறதே என்று யோசித்தேன்!" என்றாள். "சரி,சரி. போய்விட்டு வாயேன்; அதுக்கென்ன கேள்வி வேண்டியிருக்கு? நேக்குத் தூக்கம் வருகிறது. சும்மா தொந்தரவு செய்யாதே!' என்று மறுபுறம் திரும்பிப் படுத்துக்கொண்டார். கலியாணிக்கு அன்று இரவு முழுவதும் உறக்கம் வர வில்லை. சர்மாவை நினைக்கும் பொழுதெல்லாம் ஒரு மகிழ்ச்சி, அவர் மறுபடியும் தன்னைத் தழுவமாட்டாரா என்ற ஆசை. இப்படியே தன் பொருளற்ற கனவுக ளிடையே அவள் தூங்கினாள். கொழுந்து மாமலைக்குச் சென்ற சர்மாவுக்கு வேலை ஓடவில்லை. அன்று முழுவதும், கலியாணி என்ன நினைப்