உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

72 புதுமைப்பித்தன் கதைகள் வருகிறவர்கள் எல்லோரும் 'திருக்கழுக்குன்றத்துக் கழுகு என்று நினைத்துக்கொள்ளுவானோ என்னமோ! குடித்தனக்காரர் குடியிருக்க இரண்டு ரூம் காலி என்று வெளியில் போட்டிருந்த போர்டை நம்பித் முருகதாசர் வீடு- வேட்டையின்போது தான் நுழைந்தார். அங்கே 1 உள்ளே வீட்டின் பாக வசதிதான் விசித்திரமாக இருந்தது. முன் பக்கம், ஒற்றைச் சன்னல் படைத்த ஒரு சிற்றறை. அதற்கப்புறம். எங்கோ பல கட்டுகள் தாண்டி, மற்றொரு அறை. அதுதான் சமையல் வகை யராவுக்கு. முதல் அறை படிக்க, படுக்க, நாலு பேர் வந்தால் பேச - இவை எல்லாவற்றிற்கும் பொது இடம். முதலில், முருகதாசர் பொருளாதாரச் சலுகையை உத்தேசித்தே. அதில் குடியிருக்கலாம் என்று துணிந்தார். அதனால், தமக்கும் தம் சகதர்மிணிக்கும் இப்படி நிரந் தரமான பிளவு' இருக்கும் என்று சிறிதும் எட்டி யோசிக்கவில்லை; மேலும் அவர், யோசிக்கக் கூடியவரும் அல்லர். பக்கத்தில் இருந்த அரிக்கன் விளக்கை எடுத்துக் கொண்டு, அவர் சமையல் பகுதியை நோக்கிப் பிரயாண மானார். இடைவழியில், குழாயடியில் உள்ள வழுக்குப் பிர தேசம், அடுத்த பகுதிக்காரர் விறகுக் கொட்டில் முதலிய விபத்துக்கள் உள்ள 'பிராட்வேயை' எல்லாம் பொருட் படுத்தாது, ஒருவாறு வந்து சேர்ந்தார். சமையல் அறை வாசலில் ஒரே புகை மயம். "கமலம்!" என்று கம்மிய குரலில் கூப்பிட்டுக்கொண்டு, உள்ளே நுழைந்தார். உள்ளே புகைத் திரைக்கு அப்பாலிருந்து, "வீடோ லட்சணமோ! விறகைத்தான் பாத்துப் பாத்து வாங்கிக் கொண்டு வந்தியளே! ஓங்களுக்கிண்ணு தண்ணீலே முக்கிக் குடுத்தானா? எரியவே மாட்டுதில்லை! இங்கே என்ன இப்பொ? விறகு வாங்கின சீரைப் பாத்து மகிழ வந்திட்டியளாக்கும்!" என்று வரவேற்புப் பத்திரம் வாசிக்கப்பட்டது.