உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

76 புதுமைப்பித்தன் கதைகள் கொஞ்சம் கட்டிவைத்துவிட்டு, இந்த 'லிப்டன் தேயிலை.' காப்பி, கொக்கோ ஆகியவற்றின் மான்மியங்களை அவர் எழுத ஆரம்பித்தார். ஒரு பெரிய நாவல் மட்டிலும் எழுதி விட்டால், அது ஒரு பொன் காய்க்கும் மரமாகிவிடும் என்று அவர் நெஞ்சழுத்தத்துடன் நினைத்த காலங்களும் உண்டு. இப்பொழுது அது ஒரு நெடுந்தூர ஒரு நெடுந்தூர இலட்சியமாகவே மாறிவிட்டது. முன்பாவது, அதாவது நம்பிக்கைக் காலத்தில், ஏதோ நினைத்ததைக் கிறுக்கிவைக்கக் காகிதப் பஞ்சமாவது இல்லாமல் இருந்தது. அப்பொழுது ஒரு பத்திரிகை ஆபீஸில் வேலை. ஆனால், இப்பொழுது காசு கொடுத்து வாங்காவிட்டால் முதுகில்தான் எழுதிக்கொள்ளவேண்டும். முருகதாசர் நல்ல புத்திசாலி; அதனால்தான் முதுகில் எழுதிக்கொள்ளவில்லை. யாராவது ஒரு நண்பரைக் கண்டுவிட்டால் போதும்; தமது தூர இலட்சியத்தைப் பற்றி அவரிடம் ஐந்து நிமிஷமாவது பேசாமல் அவரை விடமாட்டார். நண்பர்கள் எஸ். பி.ஸி.ஏ. (ஜீவஹிம்சை நிவாரணச் சங்கம்) யின் அங்கத்தினர்களோ என்னவோ, அத்தனையையும் சகித்துக் கொண்டிருப்பார்கள்.. சந்தில் திரும்பிப் பார்த்தால் அலமுவின் ராஜ்யம் நடந்து கொண்டிருந்தது. 'ஏட்டி, என்ன? நீயோ உன் லட்சணமோ?" என்று ஆரம்பித்தார் முருகதாசர். ஒரு ரிக்ஷா வண்டி. ஏர்க்கால் பக்கத்தில் வண்டிக் காரன் உட்கார்ந்து கொண்டிருக்கிறான். அலமு, ஒரு சுண் டெவி மாதிரி. ஜம்மென்று மெத்தையில் உட்கார்ந்திருக் கிறாள். ரிக்ஷாக்காரனுடன் ஏதோ நீண்ட சம்பாஷணை நடந்து கொண்டிருந்தது போலும்! "ஏட்டி!" என்றார் முருகதாசர் மறுபடியும். "இல்லை யப்பா ? நீ இனிமே என்னை அலமுன்னு கூப்டுவேன்னியே ! என்று சொல்லிக் கொண்டே, வண்டியிலிருந்து இறங்கப் பிரம்மப் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தாள்.