உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

.82 புதுமைப்பித்தன் கதைகள் இதோ ஒரு நிமிஷம்!" என்று சொல்லிக்கொண்டு உள்ளே சென்றார். "மாமா! நீ என்ன கொண்டாந்தே!" என்று கேட்டுக் கொண்டு, சுப்பிரமணிய பிள்ளை மடியில் உட்கார்ந்து கழுத்திலிருக்கும் நெக் டையைப் பிடித்து விளையாட ஆரம்பித்தாள் அலமு. 66 'அதெப் பிடித்து இழுக்காதே! மாமாவுக்குக் கழுத்து வலிக்கும்!" என்றார் சுந்தரம் பிள்ளை. "வலிக்காதே!" என்று மறுபடியும் ஆரம்பித்தாள். முருகதாசரும். மேல் துண்டின் உதவியால் ஒரு செம்பை ஏந்திய வண்ணம், உள்ளே நுழைந்தார். "என்னப்பா, மூணு டம்ளர் கொண்டாந்தே! எனக் கில்லையா உனக்கென்னடி இங்கே! அம்மாகூடப் போய்ச் சாப்பிடு," "மாட்டேன்." என்று ஒருடம்ளரை எடுத்து வைத்துக் கொண்டது குழந்தை. முருகதாசர் காப்பியை ஆற்றி, சுந்தரம் கையில் ஒரு டம்ளரைக் கொடுத்தார். சுந்தரம் வாங்கி மடக் மடக்கென்று மருந்து குடிப்பது போல் குடித்துவிட்டு, "காப்பி வெகு ஜோர்!" என்று சர்டிபிகேட் கொடுத்தான். மற்றொரு டம்ளர் சுப்பிரமணிய பிள்ளையிடம் கொடுக் கப்பட்டது. மாமா! எனக்கில்லையா " என்று அவரிடம் சென்று ஒண்டினாள் அலமு. t வாடி,நாம் ரெண்டு பேரும் சாப்பிடுவோம்?' என்றார். முருகதாசர். "மாமா கூடத்தான் !" என்றது குழந்தை. சுப்பிர மணிய பிள்ளை கையிலிருந்த டம்ளரில் அலமுவைக் குடிக் கச் செய்தார். பாதியானதும், 'போதும்!" என்றது குழந்தை. .