ரூ. நோட்டுக்களாக 200 ரூ. இருந்தது. அது துரை அப்போதைக்கப்போது கொடுத்தது.
"எஞ் சம்பளப் பணம்... புள்ளையைப் பாத்துக்கொ!" என்று அதை நீட்டினாள்.
அன்று இருவர் தூங்கவில்லை.
பேசி முடிவதற்குள் விடிந்துவிட்டது.
"இந்தா!" என்று குழந்தையை நீட்டினாள்; "அதும் பேரு வெள்ளச்சி!"
வெள்ளையன் தலை மறையும் மட்டும் ஓர் உருவம் பாறையின் மீது நின்று பார்த்துக்கொண்டேயிருந்தது.
"அந்த லெக்கிலேதான் நம்ம ஊரு!" என்று சொல்லிக் கொண்டு அடிவானத்தின் பக்கம் பார்த்துக்கொண்டே நின்றது.
ஒரு சிரிப்பு - ஒரு பெருமூச்சு!
❍❍
வாசவன்பட்டிச் சவுக்கையில் பண்ணைப் பிள்ளை உட்கார்ந்து 'கோடு' விஷயங்களைப் பேசிக்கொண்டிருக்கிறார். பொழுது இருட்டிவிட்டது. எதிரில் நிற்கும் ஆள் தெரியாது.
அப்பொழுது ஓர் உருவம் தெருவின் ஓரத்தில் வந்து நின்றது.
"யாரது?"
"சாமி, வெள்ளையனில்லா!"
"எப்பலே வந்தே? புத்தியாயிரு சவமே! கையிலே என்னலே?"
"புள்ளை சாமி!"
"அவ, மருதி எங்கெலே!"
"செத்துப்போனா, சாமி!... சாமீ!"
"என்னலே!"
"பணம்!"
"போலே, முட்டா மூதி! நீயே வச்சுக்கோ! புத்தியாப் பொளெ!"
"புத்தி!"
5
'வாட்டர் பால'த்தில் வெள்ளையன் வந்துபோன பிறகு பல சம்பவங்கள் நடந்துவிட்டன. மருதிக்கு உலகத்தின் மீது இருந்த சிறுபசையும், இப்பொழுது அவளை விட்டு விலகி நெடுந்தூரம் சென்றுவிட்டது. அடிக்கடி குழந்தையின்மீது நினைவு சென்று விழுந்து கொண்டேயிருந்தது. குழந்தைக்கு வெள்ளைச்சி என்ற பெயர் கொடுத்திருந்தாள். நியாயமாக, அந்த விஷயத்தில் விதி
புதுமைப்பித்தன் கதைகள்
295