இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
விவகாரங்கள் ஒரு விதமாக முடிவதற்குக் காரணம் துரைதான். துரை கொலையை நாஸூக்காக அமுக்கிவிட்டார். பத்திரிகைகளில் இந்த விஷயம் வெளிவரக் கூடாது என்பதே அவர் கவலை.
மருதிக்குப் பைத்தியம் தெளியவேயில்லை. அவளும், வெள்ளைச்சியும், ராமசந்திரனும் எங்கோ சென்றுவிட்டார்கள்.
'வாட்டர் பால'த்தில் மறுபடியும் அமைதி குடிகொண்டது; தேயிலை உற்பத்தியில் அது தன்னை மறந்தது.
மரகதம்! அவளும் இப்பொழுது 'வாட்டர் பால'த்திலில்லை.
தாமோதரன் இப்பொழுது நெல்லூர்ப் பக்கத்தில் வாத்தியாராக இருக்கிறானாம். அவனுடன் மரகதம் இருப்பதைப் பார்த்தால் அவர்களுக்குக் கலியாணமாகிவிட்டது என்றுதான் நினைக்கவேண்டியிருக்கிறது. அப்படித்தான் பலரும் சொல்லிக்கொள்கிறார்கள்.
மணிக்கொடி, 31.3.1935, 14.4.1935, 28.4.1935
310
துன்பக் கேணி