உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சான்றுக் குறிப்புகள்

1. ரகுநாதன், புதுமைப்பித்தன் கதைகள்: சில விமர்சனங்களும் விஷமத்தனங்களும், என்.சி.பி.எச்., சென்னை, 1999, ப.89.

2. எம். வேதசகாயகுமார், புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும், தமிழினி, சென்னை, 2000, ப. 126.

3. புதுமைப்பித்தன் வரலாறு முதல் பதிப்பிலும் (தமிழ்ப் புத்தகாலயம், சென்னை 1951, ப. 182), மூன்றாம் பதிப்பிலும் (மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, 1980, ப. 172) புனைபெயர்ப் பட்டியலை ரகுநாதன் கொடுத்திருக்கிறார். இரண்டு பதிப்புகளும் 'நந்தி' என்றே குறிப்பிடுகின்றன. இந்தப் புனைபெயர் இதுவரை புதுமைப்பித்தன் எழுதிய இதழ்கள் எவற்றிலும் தட்டுப்படாத நிலையில், 'நந்தன்' என்பதையே இது குறிப்பிடுகின்றது எனக் கொள்ள வேண்டும்.

4. எம். வேதசகாயகுமார், புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும், ப.147.

5. புதுமைப்பித்தனோடு உடன்பணியாற்றிய எஸ். எஸ். மாரிசாமி, அவர் மறைந்தபொழுது எழுதிய இரங்கலுரையில் (காண்டீபம், 16.7.1948) "..' குலோப்ஜான் காதல்' என்று எழுதினார். தமிழ் எழுத்தாளராகப் புதுமைப்பித்தனைத் தமிழ் உலகுக்கு அறிமுகப்படுத்தி வைத்தது இந்தக் கட்டுரைதான்" என்று தெளிவாகக் கூறியிருக்கிறார். சுந்தர ராமசாமி 1951இல் பதிப்பித்த புதுமைப்பித்தன் நினைவு மலரில் இதை அவர் மீண்டும் கூறியிருக்கிறார் (ப.35). ரகுநாதனும் இதனை உறுதிப்படுத்துகிறார் (புதுமைப்பித்தன் வரலாறு, சென்னை, 1980,ப.32).

6. எம். வேதசகாயகுமார் மேற்குறித்த தமது நூலின் பின்னிணைப்பில் வெளியிட்டுள்ள புதுமைப்பித்தன் கதைகள் அட்டவணைக்கும் நான் பின்னிணைப்பு 3இல் கொடுத்துள்ள தகவல்களுக்குமிடையே உள்ள வேறுபாடுகளை வாசகர்களே ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம். நான் சேகரித்த மூல ஆவணங்கள் கலைகளுக்கான இந்திய மையத்தின் நல்கையோடு நுண்படச் சுருளிலும் குறுந்தகட்டிலும் பதிவு செய்யப்படுகின்றன. இப்பதிவுகள் சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்திலும், காலச்சுவடு அறக்கட்டளை அலுவலகத்திலும் ஆர்வமுள்ளவர்கள் பார்ப்பதற்கு .) ஜூலை 2001 முதல் வைக்கப்படும். யாருடைய தகவல்கள் ஆதாரபூர்வமானவை என்பதை லாசகர்களே நேரில் கண்டு தெரிந்துகொள்ளலாம்.

7. ரகுநாதன், புதுமைப்பித்தன் கதைகள், ப. 144-146; 102-103.

8. மேலது, ப.159-160


31