உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புரிந்துகொள்ளாத வரையிலும் மனிதனை மேல்நிலைப்படுத்தவோ அவன்மூலம் வாழ்வைச் செழுமைப்படுத்தவோ இயலாது. இந்தப் பார்வைதான் இரண்டாயிரம் வருட மரபு கொண்ட தமிழ் இலக்கியத்தின் பிடரியைப் பற்றி அதை நவீனத்துவத்திற்குள் தள்ளுகிறது. வாழ்க்கையைக் கண்திறந்து பார்க்கும் சக்தியை இழந்துவிட்ட ஒரு ஜன சமூகம் சிந்தனைகள் சார்ந்தோ தத்துவம் சார்ந்தோ இலக்கியம் சார்ந்தோ கலைகள் சார்ந்தோ எந்தப் பாதிப்பையும் பெற முடியாது என்பது புதுமைப்பித்தனின் அடிப்படையான நம்பிக்கைகளில் மிக முக்கியமானது.

...இலக்கியத்தில் இன்னதுதான் சொல்ல வேண்டும், இன்னது சொல்லக்கூடாது என ஒரு தத்துவம் இருப்பதாகவும் அதை ஆதரித்துப் பேசுவதாகவும் மனப்பால் குடித்துக்கொண்டிருக்கலாம். உண்மை அதுவல்ல; சுமார் இருநூறு வருஷங்களாக ஒருவிதமான சீலைப்பேன் வாழ்வு நடத்திவிட்டோம். சில விஷயங்களை நேர் நோக்கிப் பார்க்கவும் கூகூகிறோம். அதனால்தான் இப்படிச் சக்கர வட்டமாகச் சுற்றி வளைத்துச் சப்பைக்கட்டு கட்டுகிறோம். குரூரமே அவதாரமான ராவணனையும், ரத்தக் களறியையும், மனக் குரூபங்களையும், விகற்பங்களையும் உண்டாக்க இடமிருக்குமேயானால், ஏழை விபசாரியின் ஜீவனோபாயத்தை வர்ணிப்பதாலா சமூகத்தின் தெம்பு இற்றுப்போகப் போகிறது? இற்றுப்போனது எப்படிப் பாதுகாத்தாலும் நிற்கப் போகிறதா? மேலும், இலக்கியம் என்பது மன அவசத்தின் எழுச்சிதானே. நாலு திசையிலும் ஸ்டோர் குமாஸ்தா ராமன், ஸினிமா நடிகை சீதம்மாள், பேரம் பேசும் பிரமநாயகம் - இத்யாதி நபர்களை நாள் தவறாமல் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, இவர்களது வாழ்வுக்கு இடமளிக்காமல், காதல் கத்திரிக்காய் பண்ணிக்கொண்டிருப்பது போன்ற அனுபவத்துக்கு நேர் முரணான விவகாரம் வேறு ஒன்றும் இல்லை. நடைமுறை விவகாரங்களைப் பற்றி எழுதுவதில் கௌரவக்

குறைச்சல் எதுவும் இல்லை (புதுமைப்பித்தன் கட்டுரைகள், 1954).

இந்த நம்பிக்கையை அவரது புனைவுகளில் பரிசீலனை செய்ய விரும்புபவர்களுக்குப் புதுமைப்பித்தன் அளிப்பது ஒரு உலகம். மரபோ, வேறு புறச் சக்திகளோ சொல்லும்படி பங்கு கேட்க முடியாத அவரது ஆளுமையின் வளர்ச்சியிலிருந்து உயிர் பெற்ற ஒரு உலகம். அந்த உலகத்தின் மூலம் இணைக்கப்படும் உறவு மிக முக்கியமானது. அது படைப்புக்கும் வாழ்க்கைக்குமான உறவில் புது ரத்தத்தைப் பாய்ச்சுகிறது. இந்தப் பார்வையில் வாழ்க்கை பற்றிய மயக்கங்கள் சிதறித் தெறிக்கின்றன.

மரபிலிருந்து வேறுபட்ட யதார்த்தப் பார்வையும், வெளியீட்டுப்

பாங்கில் சிந்தனைகள் குமிழியிடும் விமர்சனமும் கொண்ட புதுமைப்-

35