இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பற்றும் பாக்கியம் எனக்கில்லாவிடினும் எனதிதயத்தைத் தாங்கள் அடைந்துவிட்டீர்கள். (பேச முடியவில்லை)... விடைபெற்றுக் கொள்வதற்குமுன் ஒரு பிரார்த்தனை; தாங்கள் உண்மையாக என்னைக் காதலித்தீர்களாயின், கடவுளறிய என் பதியாயின், என்னைத் தங்கள் பத்தினியாகக் கருதின், நான் இவ்வுலகைப் பிரிந்தேனென்பதற்காகத் தங்களுக்கு ஒருவிதத் தீங்கும் செய்து கொள்ளக்கூடாது..."
'கண்ணீர் தாரை தாரையாக ஓட ஒவ்வொரு வார்த்தையாகக் கடிதத்தைச் சொல்லிக்கொண்டே போனார். கடைசியில் "இந்தப் பாவி இன்னும் இருக்கிறேனே" என்று அலறிக்கொண்டே கீழே விழுந்தார்.
காலம் தெரியவில்லை
புதுமைப்பித்தன் கதைகள்
687