'வண்டி' வந்துவிட்டது. கைகாட்டியை நெருங்கிவிட்டது. கை காட்டி கிட்ட வந்துவிட்டது. என்ஜின் ஊதுகிறது. இரண்டு முறை, மூன்று முறை....
கைகாட்டி தன் வேலையை மறந்து குழந்தையைப் பார்த்துக் கொண்டே இருக்கிறது.....
என்ஜின் குழந்தையாகிவிட்டது. "பொடிம்மா... உனக்கு வெளையாடவே தெரியலிலே... கைகாட்டி சாயாமே ரயிலு வருமா? வாண்டாம் போ..." என்று தரையில் காலை உதைத்துவிட்டு முகத்தைத் தொங்கப் போட்டபடி மரத்தடியில் போய் உட்கார்ந்து கொள்ளுகிறது.
தனக்கு விளையாடத் தெரியவில்லை என்பதையும் ரசித்துக் கொண்டு குழந்தையிடம் பக்கத்தில் போய் உட்கார்ந்துகொண்டு, "குஞ்சம்மா, குஞ்சம்மா வேறே வெளையாட்டுச் சொல்லேன், விளையாடுவோம்... வட்டாடுவோமா?” என்று தனக்கு ஞாபகமுள்ள விளையாட்டைக் குறிப்பிடுகிறான்.
மனசில் அது ரசிக்காததினால் "வாண்டாமா, ஒனக்குத்தான் ராசா மாதிரி வெளையாடவே தெரியலியே" என்கிறது.
"ராசா யாரும்மா?" என்று கேட்கிறான் நாடோடி.
"எங்கண்ணன்?' என்று நெஞ்சைத் தட்டிக்கொள்கிறது.
"பள்ளிக்கூடம் போயிருக்கானாம்மா?" என்கிறான் நாடோடி.
"செத்துப்போயிட்டான்" என்றாள் இரண்டு கைகளையும் விரியத் திறந்து காட்டிவிட்டு, "எங்கப்பாதான் பள்ளிக்கொடத்துக்குப் போயிருக்காங்க" என்கிறது.
மரணத்தின் பரிபூரண அர்த்தத்தையும் கிரகியாமல், இரண்டு பிரிவின் தன்மையையும் ஒரே அளவில் வைக்கும் குழந்தையின் மனப்பான்மை அவனை அதிசயத்தில் ஆழ்த்துகிறது.
அவன் வேறு ஏதோ கேட்கிறதற்கு வாயெடுக்கையில், குழந்தை கண்களை 'பூச்சிக் கண் மாதிரி வைத்துக்கொண்டு' "எங்க தாத்தா வரப்போறாங்களே எனக்கு!- அவனுக்குத் தலையை ஆட்டிக் கொண்டு அறிவிக்கிறது.
"உங்கப்பா பேரு என்னம்மா?" என்கிறான்.
"சுந்தலவடிவேரு' என குழந்தை லகர ரகரத்தைக் குழப்பியடிக்கிறது.
"பெரிய பள்ளிக்கூடம் அங்கே இருக்கு பாரு, அதுலெ வாத்தியாரு" என்று வியாக்கியானம் செய்கிறது.
குழந்தையின் மரண ஞானத்தைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள நாடோடிக்கு ஆவல். "உங்க அண்ணெ ராசா எப்பிடியம்மா செத்துப்போனான்?" என்று கேட்டார்.
'அணணெக்கி மளெ பேயலெ பெரிய மளெ - அப்பொ -இந்த சித்தி இருக்காள்ள.. அவென கொடையப் புடிச்சுக்கிட்டு போகச்
710
சிற்றன்னை