உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/761

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாடாட் கண்களில், வசனமிருப்பதுபோல் உட்கார்ந்திருக்கும் பெருமாள் குடும்பம் கண்ணில்பட்டது.

"முருகேன்!" என்று அதட்டிக் கூப்பிட்டார் கலெக்டர்

"ஸார்!" என்று பதறிக்கொண்டு ஓடிவந்தான் முருகன்.

"இவர்கள் வந்து எத்தனை நேரமாச்சு?" என்று அதட்டினார்.

"எனக்கு ட்யூட்டி நாலு மணியிலிருந்துதான். வந்தபோதே இவர்கள் உட்கார்ந்திருக்கிறார்கள்" என்றான் முருகன்

"இப்பொழுது மணி என்ன?"

"ஐந்தே முக்கால்.'

"நான் யாரையாவது அவ்வளவு நேரம் காத்திருக்க வைப்பதுண்டா?"

முருகன் மவுனமாக நின்றான்.

"என்னா மேன் பேசாமெ இருக்கிறே; நீ அவுங்ககிட்டே கேட்டியா, அல்லது என்கிட்டே சொன்னியா?" என்றார்.

"சுப்பையா சொல்லி ..." என்று ஏதோ முணமுணத்தான் முருகன்.

"சுப்பையா!" என்று அழுத்தி ஒரு தடவை சொல்லிவிட்டு, "நீ உன் டயரியிலெ பத்து ரூபா அபராதம் என்று எழுதிக்கொள்" என்று சொல்லிவிட்டு திடுக்கிட்டு நின்றவனைக் கவனியாமலே "ஹல்லோ மிஸ்டர் பெருமாள் எனக்கு ரொம்ப சங்கடமாப் போச்சு, நீங்க உள்ளே வாருங்க" என்று உள்ளே அழைத்துச் சென்றார்.

இவர்களுடன் பேசும்போது அந்தச் சீற்றத்தின் சுவடுகூடத் தென்படவில்லை. அவ்வளவு மரியாதை.

சுப்பிரமணியனுக்கு தங்கள் சார்பாக நடந்த இந்த அபராத நாடகம் ஏதோ ஒரு மாதிரியாக இருந்தது. எதற்கெடுத்தாலும் அதிகாரம், மிடுக்கு. இத்தனையும் யாருக்காக - எதற்காக?...

"இப்பொழுது சவுக்கியம் எப்படி? இது உன் மகனா?" என்று கேட்டார் கலெக்டர்.

உள்ளே வந்து உட்கார்ந்ததும் சுத்தமான தமிழ் பேசுவதைக் கண்டதும் ஆச்சரியப்பட்டான் சுப்பிரமணியம்.

"நான் தமிழ் பேசுவது உனக்கு அதிசயமாக இருக்கிறதா; நான் குறள்கூட பாராமல் சொல்லுவேன்" என்று சிரித்தார் கலெக்டர்

"ஹி இஸ் என் எக்ஸ்பர்ட் [1]லிங்க்விஸ்ட்' என்று இங்கிலீஷில் தமது கலெக்டருடைய பாஷா விலாசத்தை வியாக்கியானம் செய்தார் பெருமாள் பிள்ளை.

'அவரை எனக்குப் பரிச்சயம் செய்து வைக்கவில்லையே" என்றார் கலெக்டர்.


  1. அவர் பாஷைப் பாண்டித்தியம் நிறைந்த நிபுணர்.

760

அன்னை இட்ட தீ