பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுமைப்பித்தன்

  • 'புருஷன் தன் சோர நாயகியைத் தேடி. இருட்டில்

போனான்; அந்தப் புருஷனின் மனைவி தன் சோர நாகனைத் தேடி இருட்டிலே போனாள். இருட்டில் இருவரும் ஒருவரை யொருவர் இனம் தெரியாமல், புருஷனைச் சோர நா 198கனென் லும், மனைவியைச் சோரநாயகி என்றும், இருவருமே தப்பாகக் கருதி, ஒருவர் கையை ஒருவர் பிடித்தவாறு வெளிச்சத்துக்கு வந்தனர். பிறகு இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் பார்த்து விழித்தார்கள். இதைப் போலத்தான் இந்தக் கதாசிரியரும் கவிஞரும் இப்போது விழிக்கிறார்கள். இருவருமே காப்பி யடித் தவர்கள், இரண்டுக்குமே மூலம் வேறு. அதனால் அந்தக் கதா சிரியர் தம் கதையைக் காப்பியடித்து விட்டதாகக் கூறுவது தப்பு; கவிஞர் காப்பியடிக்கவில்லை என்று கூறுவதும் தப்பு!

  • இது தான் விஷயம்!

நவயுகப் பிரசுராலயத்தில் புதுமைப்பித்தனின் நூல் ஒன்று அச்சாகி, பாரங்கள் ஒருபுறத்தில் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. அந்த அடுக்கின்மீது ஏறி உட்கார்ந்து கொண்டு. சிகரெட் பிடித்தார் புதுமைப்பித்தன். ஞாபகமறதியாக சிக ரெட் கட்டையை அடுக்கின்மீதே போட்டு விட்டார். சிறிது நேரத்தில் புகை கிளம்பி, பாரங்கள் தீப் பிடித்து விட்டன. உடனே பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைத்து விட்டனர். புதுமைப்பித்தன் மட்டும் சும்மா அசையாது இருத் தார், அட, என்ன மனுஷனையா நீர்? உம்முடைய புத்தகம் எரியுது, சும்மா இருக்கிறீரே என்று சத்தமிட்டார் பக்கத்தி லிருந்த காரைக்குடி சா, கணேசன். “எரிகிற நெருப்பை 'ஏன் அணைக்க வேண்டும்? சாம்பல் குவியல் எத்தனையோ தத்துவங்களைத் தந்திருக்கும். அதெல் லரம் இப்போ நஷ்டமாய்ப் போச்சு என்று சாவதானமாகப் பதில் கூறினார் புதுமைப்பித்தன்.