பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 புதுமைப்பித்தன் தனக்கே விசுவாசமும் நம்பிக்கையும் இல்லாத 'எழுத்தாளன் jேநர் மீதுமான , எழுத்தாளனாக இருக்க முடியாது... ஆனால் புதுமைப்பித்தனிடம் அத்தகிைடம் நேர்மையும் நாணயமும் பக்தியும் தம் எழுத்தின் மீதே இருந்தன. இது போற்றத் தக்க விஷயம். இது இல்லா விட்டால், எழுத்தாளன் தன் 7:40த் ைதயே விலையாக்கவும் தயங்க மாட்டான். எனவே அவர்தம் கதைகளைப் பற்றி வீராப்புடன் பேசினால் அதில் அர்த்தம் உண்டு. அது ஓர் அறச் செகுக்த; மறச்செருக்கு அல்ல). தமது எழுத்தின் தரத்தை. தகுதியை உணர்ந்த, அறிந்த நண்பர்கள் அது பற்றிக் கருத்துத் தெரிவித்தால் அவர் கவனமாகக் கேட்பார். அத்தகைய கருத்துக்களை அவர் அது கொடுத்துக் கேட்பதும், கேட்காததும் கருத்தைத் தெரி விக்கும் மனிதனைப் பற்றி அவர் வைத்துள்ள மதிப்பு அல்லது செய்துள்ள மதிப்பீடு --அதனைப் பொறுத்ததாகவே இருக்கும், ஒரு கடைத்தர. எழுத்தாளன் அது3ர.. முகஸ்துதி செய்வதற் காக அவரது கதையைப் பாராட்டினால் அவர் சீறிவிடுவார். < * * யார், என் கதையைப் பாராட்டுவதற்கு? என்றே கேட்டு விடுவார். அவர் மதிக்கும். நண்பர்கள் விமர்சன ரீதியில் கருத்துத் தெரிவித்தால், அடர்ந்து கேட்பார். ஆனாலும் அந்த விமர்சனத்தை ஏற்றுக் கொள்வாரா என்று சொல்ல முடியாது . அதை வாங்கி மனசில் அசை போடுவதற்கு வைத்து விடுவார். ஒருமுறை நான் அவரிடம் 'பிரம்ம ராட்சஸ்" என்ற கதையைப் பற்றிப் பேசினேன், 2 ' அந்தக் கதையில் என்னதான் சொல்ல விரும்புகிறீர்கள்? அதில் என்னவோ' ஏழு சஞ்சிகளைப் பற்றி வேறு சொல்கிறீர்கள், எதுவும் புரியவில்லையே? என்று, ஆரம்பித்தேன். முதலில் அவர் அந்தச் சஞ்சிகளை ' என்ன வென் று; விளக்கவே தொடங்கி விட்டார். இந்த விளையாட் டெல்லாம் வேண்டாம். அந்தக் கதையை ஏன் எழுதினீர்கள்? நோக்கம் என்ன? என்று நேராக்வே கேட்டேன். உடனே அவர் உடமடவென்று சிரித்தார். பிறகு சொன்னார். " " பச்சை யாகச் சொல்லட்டுமா? வார்த்தைகளை வைத்துக்கொண்டு வாசகனைப் பாங்காட்டி ' மிரட்ட முடியும் என்பதற்காகவே அதனை எழுதினேன். படித்தால் பயமாக இருக்கிறதல்லவா? என்று கூறி முடித்து விட்டார் அவர்.