பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுமைப்பித்தன் பேனுமொரு காதலினைக் கருதியன்றே . " பெண்மக்கள் கற்புநிலை பிறழுகின்றார்; காணுகின்ற காட்சியெல்லாம் மறைத்துவைத்துக் கற்புகற் ; என்றுஉலகோர் கதைக்கின்றாரே. என்ற பாரதியின் அடிகள்தான் பொன்னகரம் கதைக்கான தோற்றுவாயும் விளக்கமும் ஆகும். இதேபோல் * துன்பக் கேணி' என்ற அவரது நெடுங்கதைக்கு அடியெடுத்துக் கொடுத்ததும் பாரதியின் 'கரும்புத் தோட்டத்திலே" என்ற பாட்டுத்தான். “துன்பக் கேணியிலே எங்கள் பெண்கள் அழுங்குரல் மீட்டும் உரையாயோ?' என்று பாரதி கேட் டாரே. அதற்குப் பதில் எழுதுவதுபோலத்தான் கரும்புத் தோட்டத்துக்குப் பதிலாக, தேயிலைத் தோட்டத்தைக் களமாக்கி. * துன்பக்கேணி' என்ற கதையில் தமிழ்நாட்டுப் பெண்கள் பட்ட துயரைக் கூறினார். புதுமைப்பித்தள். என்னா' ஆம், 'கோடாலய்யங்கார். மனைவி' என்ற கதையை அவர் ஏன் எழுதினார்? பழைய கதைகளை எடுத்து அதற்கு - ஒரு twist கொடுத்து, புதுமைப்பித்தன் எழுதியதற்கு அன்றிரவு, அகல்யை, சாப விமோசனம் எல்லாம் உதாரணங்கள், அகே" போலத் தான் பாரதியார் கதைக்கும், அவர் ஒரு twist கொடுத்து, அதனை ஒரு நகைச்சுவைக் கதையாக மாற்றினார். இந்தச் செயலில் வேடிக்கைத் தன்மையைத் தவிர விஷ மத் தன்மை எதுவும் கிடையாது. எனவே, இதை வைத்துக் கொண்டு மட்டும் முற்போக்கு, பிற்போக்கு என்று எரிந்த கட்சி, எரியாத கட்சி ஆட இடமில்லை. ஆனாலும் புதுமைப் பித்தள் விஷயத்தில் அவ்வாறு கட்சியாட இடமுண்டு. அதற் குக் காரணங்களும் வேறு விஷயங்களில்தான் உள்ளன. . '. கேள்வி : - புதுமைப்பித்தன் பாப்பையும் ஏற்றுக் கொள்ளவில்லை, வசன கவிதையையும் ஏற்றுக் கொள்ளவில்லை என்று புதுமைப் பித்தன் கவிதைகளுக்கு எழுதிய முன்னுரையில் சாராம்சமாகக் டேறி இருக்கிறீர்கள். யாப்பையும் துறந்த, வசன கவிதையும் அல்லாத இன்றைய புதுக் கவிதைகளைப் புதுமைப்பித்தன் வர வேற்றிருப்பாரா? புதுமைப்பித்தனின் கவிதை முயற்சிகள் தற் கால இலக்கியத்தில் என்ன பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது?