பக்கம்:புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை).pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ஜீவனும் கனமும் அழகும் சேர்க்கின்றன. சிலையைக் கோவிவில் வைக்கப்போவதாக சிற்பி சொல்கிறான். அரசனின் அந்தப்புரத்தில் அதை வைத்தால் அதற்கு அர்த்தம் உண்டு என்று கிரேக்கன் சொல்கிறான்.

சிலை கோயிலில் உரிய முறைப்படி வைக்கப்படுகிறது. அன்று இரவு சிற்பி ஒரு கனவு காண்கிறான். கர்ப்பக்கிருக இருளிலே சிலை ஆழ்ந்துவிடுகிறது. அதன் கலை அழகை எவரும் காண்பதில்லை. எண்ணற்ற மனிதர்கள். அந்தகாரத்தின் சாயைகள்போல வருகிறார்கள். அதன்முன் தலைவனங்கி நிற்கிறார்கள். கண்களை மூடிக் கும்பிட்டவாறே, எனக்கு மோட்சம் எனக்கு மோட்சம் என்று பிராார்த்திக்கிறார்கள். சிற்பி ஏமாற்றமும் ஆத்திரமும் அடைகிறான். உயிரற்ற மோட்சச் சிலையே, நீ ஒழிந்துபோ என்று அதை உடைத்து எறிவதற்காக அதைப் பிடித்து இழுக்கிறான். அந்தக் கனத்த சிலை அவனை அமுக்கியபடி கீழே சாய்கிறது. என்ன பேய்க் கனவு என்று விழிப் படைந்து அதிர்ச்சியுறுகிறான் அவன். அவனது மனம் கிரேக்க சிந்தனையாளன் பைலார்களை நினைத்துக் கொள்கிறது.

படித்துப் படித்து ரசிக்கவேண்டிய கதைகளுள் இந்த சிற்பியின் நரகமும் ஒன்று ஆகும். மனிதர்களுக்கு தெய்வ நம்பிக்கை இருந்தாலும்கூட, சில நெருக்கடியான கட்டங்களில், சோதனை சந்தர்ப்பங்களில், கடவுளே, நீ இருக்கிறாயா? தெய்வமே.நீ உண்மைதானா? என்று அவர்கள் குழம்பவும். வாய்விட்டு அரற்றவும் நேரிடுகிறது. புதுமைப்பித்தன் கதைகளில் இப்படிப்பட்ட பாத்திரங்களும், இந்த விதமான நெருக்கடி நிலைகளும் சில இடங்களில் தலைகாட்டியுள்ளன.

மதம் மாறி, அண்ணன் தம்பி இருவரும் ஒருவருக்கு ஒருவர் பரம விரோதிகளாகி, தாயின் மரணப் படுக்கை அருகிலும் சண்டை போட்டுக் கொள்வதை விவரிக்கும் புதிய கூண்டு கதையில், தாய் மீனாட்சி அம்மாள் இவ்வாறு கதறுகிறாள் ‘தெய்வமே நீ இருக்கிறாயா? என் இரத்தம், என் குழந்தைகள்: இவைகள் இரண்டிற்கும் இப்படிச் சண்டையை உண்டு பண்ணி விட்டதே. தர்மமா? இது நிஜந்தானா? இதற்குமேல் எல்லாம் ஒன்று உண்டா? ஏ தெய்வமே, நீ நிஜந்தானா?’

இன்னொரு கதை. சிற்றுார் என்ற சிறிய ஊரில், அரிஜன ஆலயப் பிரவேச காலத்தில், ஒரு தியாகி பிரசாரம் செய்கிறார். அவரை மேல் சாதிக்காரர்கள் எதிர்க்கிறார்கள். விழிப்பு உணர்வு பெறாத சேரி மக்களும் எதிர்க்கிறார்கள். அவர் சேரி மக்களினாலேயே தாக்கப்பட்டு