பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


19|முருகுசுந்தரம் யரசு- தண்டபாணி தேசிகர், ஏழிசைமன்னர் தியாகராஜபாகவதர், நாதசுர சக்கரவர்த்தி இராச ரத்தினம் முதலான பலர் பங்கு பெறுவர். அந்த விழாக் களில் ஓரிருமுறை பாவேந்தர் அவர்களும் வந்து கலந்து கொள்வார். தமிழிசை நாடெங்கும் பரவவேண்டும், வேற்று மொழிப் பாட்டு சங்கீதமாவதை மாற்ற வேண்டும் என்னும் தணியாத வேட்கை அவருக்கிருந்தது. எனினும் நமது இசைவாணர்கள் பாடும் தமிழ்ப்பர்ட்டுகள் பெரிதும் புராணம் பரப்பும் பக்திப் பாடல்களாகவே அமைந்து, வைதிகம் வளர்க்கப்படுவதை அவர் விரும்பவில்லை. ஒரு இசை விழாவில் தேசிகர் இசையரங்கு நிகழ்த்தினர். பல தமிழ்ப் பாடல்கள் பாடிலுைம் இடையில் இரண்டு தெலுங்குக் கீர்த்தனங்கள் பாடினர். பாவேந்தர் தங்கி இருந்த இடத்தில் அவரைக் காண வந்த என் கல்லூரித் தோழர்கள், அந்தப் பாட்டரங்கு பற்றி அவரிடம் விவரித்தனர். தெலுங்குப் பாட்டு பாடி ஞர் என்று கேட்டதும், ஒரு எள்ளல் நகை பிறந்தது அவரிடம். நம்மவரின் பஞ்ச புத்தி போகாது’ என்று வெகுண்டார். ஏன்? என்றேன் நிான். எவ்வளவு பெரிய இசைவாணர் ஆலுைம்-தெலுங்குக்கீர்த்தனம் பாடா விட்டால் தம்மை ஒரு சங்கீத வித்துவான் என்று மதித்து ஒப்புக் கொள்ளமாட்டார்கள் என்று பயப் படுகின்றனர்! தமிழ்ப்பாட்டுகளுக்கு என்ன பஞ்சமா? ஒரு முழுப்பாட் டரங்கும் தமிழ்ப் பாட்டுகளே பாடினல் என்ன குடி முழுகிப் போய்விடுமா? அக்ரக்சரமும்-பத்திரிகை களும் பாராட்டாவிட்டால்-பாட்டுத் திறமை போய் விடுமா? நம்மவர்கள் 'மான உணர்வு கொன்ன வேண்டாமா? தமிழால் சிறந்த இசையரங்கு நிகழ்த்த முடியாது என்கின்றனர்-நம் எதிரிகள். அந்தப் பழிச் சொல் உண்மையாவதற்கு அன்ருே, இவர்கள் இடத் தருகின்றனர்!’ என்று கூறித் தமது வெகுளியை வெளிப்படுத்தினர். மேலும் தமிழிசை பற்றி அவர் தெரிவிக்கையில்,