உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 புதுவை (மை)க் கவிஞர் கையாளப் பெற்றிருப்பதைக் கண்டு மகிழலாம். பிறி தோரிடத்தில், செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே." என்று பாடுகின்றார் பாரதியார். இயற்கையாகச் சுவையை நாக்கின் மூலமே உணர்கின்றோம். காதின் மூலம் இந்தச் சுவையை உணரலாம் என்பது இயற் கைக்கு முரண்பட்டது. ஆனால், நாக்கின் தொழிலைக் காதின் மேலேற்றிக் கூறும் திடுக்கிடும் அநுபவம் நுண் ணுணர்வின் பாற்பட்டது. பொறிகளுக்குள்ள வேறுபாடு உடலியலைப் பற்றிய வரையில் உண்மையாகும்; உளவியல் அல்லது மனநிலையைப் பற்றிய வரையில் வேறுபாடு காண இயலாது. இரண்டின் விளைவும் ஒன்றுதான் என்ற நுண்ணுணர்வைக் காணும் பொழுது தான் வசன கவிதை பிறக்கின்றது. காதை அடிப் படையாகக் கொண்ட எதுகை மோனைகட்கு இப் பொழுது இன்றியமையாமை இல்லாமல் போய் விடுகின்றது என்பது உண்மை; கசப்பான உண்மையும் கூட. மேற்காட்டிய இரண்டு இடங்களிலும் பொறிகள் தங்கள் தங்கள் தொழில்களைப் பரிவர்த்தனை செய்து கொள்ள இயலும் என்ற கவிதை உண்மை தட்டுப்படு கின்றது. இந்த இடங்களில் பொறிகளின் தயவையும் மீறிய நேரிடையான அநுபவத்தால் இயற்கையான நுண் ணுணர்வு செயற்படுவதைக் கண்டு வியப்படைகின்றோம். இக் கவிதையை மேலோட்டமாகப் படி க்கும்போது ‘வசனம் போல் நடக்கின்றது; சற்றுச் சிந்தித்துப் படிக் கும்போது கவிதை'யாகி விடுகின்றது. சிறகுடன் பறப் பது போன்ற உணர்ச்சி மேலிடுகின்றது. இதனால்தான் 7. தே. கீ. செந்தமிழ்நாடு-1