உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f{}{} புதுவை (மை)க் கவிஞர் கவிதையாளர்கள் எழுதும் புதுக் கவிதைகளில் இந்த உண்மையைத் தெளிவாகக் காணலாம். ஊன்றி நோக்கு வார்க்கே இது தட்டுப்படும். செய்யுள் உரைநடை என்ற இரண்டிலும் கவிதை தென்படும் என்பது உண்மையே யாயினும், கவிதையின் கருப்பொருளுக்கிணங்க தான் மேற்கொள்ள வேண் டிய சாதனத்தை அறுதியிட்டுக் கொள்ளுகின்றான் கவிஞன். புதுக் கவிஞர்களில் சிலர் செய்யுள் வடிவத்திலும், சிலர் செய்யுள் உரைநடை ஆகிய இரண்டிலும், சிலர் வசனத்தில் மட்டிலும் தம் கவிதைகளை அமைக்கின்றனர். ஆனால், புதுக் கவிஞர்கள் அனைவருமே கவிதை வசனத் தில் இயங்கும் என்பதை ஒருமுகமாக ஒப்புக் கொள்ளு கின்றனர். இதனால் நாம் அறிந்துகொள்ளுவது; இன்றைய கவிஞர்கள் யாப்புணர்வு இல்லாமல் தம் கவிதைகளைப் படைக்கின்றன்ர். தாம் மேற்கொள்ளும் சாதனம் செய்யுளா வசனமா என்று அலட்டிக் கொள்வ தில்லை. இவை இரண்டுமே கவிதையின் உண்மையான வடிவம். புராணத்தில் வரும் மன்மதனை ஒவியத்தில் எழுதிக் காட்டுவதற்கு ஒப்பாகும். சிவனது நெற்றிக் கண்ணால் எரிக்கப்பட்ட மன்மதன் ரதிதேவியின் கண் களுக்கு மட்டிலுமே தென்படுவானாம். அதுபோல இலக் க்ண்ண தெய்வத்தின் நெற்றிக்கண் நெருப்புக்கு இரையான புதுக் கவிதையின் உருவமும் உண்மையான இலக்கிய ர்தி களுக்கு தென்படக்கூடும்”. கவிதையின் கருத்து வெளிப் ப்டும் அழகே கவிதையின் வடிவம். ஒரே பாவினத்தில் எழுதப் பெறும் இரண்டு கவிதைகள் வடிவத்தில் ஒன்று போலக் கர்ணப்பட்டாலும் அவை வெவ்வேறு வெளியீட் டுத் தன்மையைக் கொண்டிருக்க முடியும். எடுத்துக் காட்டுகளாக இரண்டு சான்றுகளைக் காட்டலாம். 9. புதுக் கவிதையின் உருவம் (மீரா). (அன்னம் மலர்-1976)