உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

曙 புதுவை (மை)க் கவிஞர் இடம் உண்டு. இவற்றைப்போல் தமிழ்மொழியில் வேறில்லை. இவை ஆங்கில மொழியிலுள்ள தேசிய கீதங் களுக்குப் (Songs of Patriotism) பொருட் சுவையிலும் இசைச் சுவையிலும் எள்ளளவேனும் தாழ்ந்தவை அல்ல என்று சொல்லலாம். செந்தமிழ்நாடு'(20) என்ற பாடல் அவர் உரைகல்லில், 'செந்தமிழ் நாட்டின்' - முதன்மொழி செவியிற் சேருமுன்னே அந்தமில் லாமல் - உள்ளத்தில் அமுதம் ஊறுதடா ! (11) என்று காட்டப் பெறுகின்றது. கரும்புத் தோட்டத்திலே’ (53) என்ற பாடல், கரும்புத் தோட்டத்திலே - எனுகவி காதைச் சுடுகுதடா இரும்பு நெஞ்சமுமே - நீராய் இளகி யோடுதடா (10) என்று ஒளி விடுகின்றது, வந்தே மாதரம் (1) என்ற கவிதையின் மாற்றை, 'வந்தே மாதரத்தைப் - பாடவே வாய்தி றந்தவுடன், சந்தேக மில்லை - ஒரு புதுச் சக்தி தோன்றுதடா (14) என்று காண்கின்றோம். பாரத நாட்டின் பழம் புகழையும் தற்கால நிலைகளையும் சிந்தித்து, நாட்டன்பு கொண்டு 'எந்தையும் தாயும் (3), மன்னும் இமயமலை (6) நளிர் மணி நீரும் நயம்படு கனிகளும்’ (19), என்ற முதலடிகளை யுடைய பாட்டுகளிலும், பாரத மாதா திருப்பள்ளி