உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுப்பிரமணிய பாரதியார் : ஒரு கண்ணோட்டம் 21 என்று அன்னை படைத்த ஞானச் செல்வங்களை யெல்லாம் எண்ணி எண்ணிக் களிக்கின்றார். விடுதலையே பாரதியாரின் தாரக மந்திரம். நாட்டுப் பற்றைப்போலவே இதுவும் ஒரு பாரதீயம்; நாட்டுப் பற்றிலிருந்து கிளைத் தெழுந்த ஒரு கொள்கை. 'வந்தே மாதரம் ஒன்றே தாரகம்’ என்பது இதன் உயிராய பண்பு. எனவே, வீர சுதந்திரம் வேண்டிநின் றார்பின்னர் வேறொன்று கொள்வா ரோா?-என்னும் ஆரமு துண்ணுதற் காசைகொண் டார்கள்ளில் அறிவைச் செலுத்துவா ரோ?" என்று கேட்கின்றார். நாயன் மார்கட்கும் ஆழ்வார்கட்கும் பக்தி அவர் தம் மூச்சாக இருந்தது போலவே, இவருக்கு விடுதலையே மூச்சாக இருந்தது. சமயப் பற்று இந்நாட்டு மக்களிடையே குருதியுடன் ஊறிக் கிடப்பதை நன்கு அறிந்தவர் பாரதியார். இறைவன் பெயர்களைக் கூறிய அளவில் பிறவித் துயர் அனைத்தும் அறுந்தொழியும் எனச் சுட்டியுரைத்தலும் சமயத் தொண்டர்களை வழிபடுதலும் சமயப் பற்றாளர்களின் நடைமுறை ஒழுக்கங்கள் என்பதைத் தெளிவாக அறிந்தவர் நம் கவிஞர் பெருமான். எனவே, இந்திய நாட்டையே பாரத மாதாவாகவும், சுதந்திரத்தையே சுதந்திர தேவியாகவும் பாடிப் பரவி இம் மரபினைத் தழுவிக் கொள்ளுகின்றார். சமயத்துறைப் பாங்கில் ஒரு கொள்கையைப் பரப்பினால்தான் இந் நாட்டு மக்களுக்கு ஏற்கும் என்பதை நன்கு தெளிந்து பாரத மாதா திருத்தசாங்கம்', 'பாரதமாமா நவரத்தின. மாலை போன்ற பாடல்களைப் பாடுகின்றார். 16. டிெ. சுதந்திரப் பெருமை - 1.