உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iv தேசிய கீதங்களுக்குப் பொருட்சுவையிலும், இசைச்சுவை யிலும் எள்ளளவேனும் தாழ்ந்தவை அல்ல" (ப. 6) என்பது ப்ேராசிரியரின் கருத்தாகும். ஆழ்வார் பாசுரங்களில் ஆழங்கால்பட்ட பேராசிரியர், பாரதியாரின் பாடல்களில் காண ப்படும் ಫ್ಲಿಕ್ಹಾ பாசுரங்களின் செல்வாக்கை ஆங்காங்கே குறிப்பட்டுச் செல்கிறார். அத்துடன், புதுக் கவிதைகளையும் அவர் விட்டு வைக்கவில்லை. பாரதியாரின் பாடலகளைத திறனாய்வு செய்யும் வேளையில், தம் வாழ்க்கையில் நிகழ்ந்து சில நிகழ்ச்சிகளை-பாரதியார் பாடலகள தொடர்பானவற்றை-வெளிப்படுத்தவும் (பக்.12, 13) மறந்துவிடவில்லை. இதை ஓர் உத்தியாகவே கைக்கொள் கிறாரோ என்று கூட எண்ண்த் தோன்றுகின்றது. மொழியையும் இனத்தையும் நாட்டையும் இணைத்துப் பாடிய 'ப்ாரதீயம் பார்தியார்தம் இணையற்ற கொள்கை (ப.23) என்கின்றார் பேராசிரியர், கல்விச் சிந்தனையாளர் எனும் பகுதியில் பாரதியாரின் கல்விச் சிந்தனைகளை மிகத் தெளிவாகப் பேராசிரியர் அலசுகிறார். ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பணியாற்றிய அநுபவம் நின்றந்த பேராசிரியர், தாய்மொழியில் கல்வி கற்பதையும், அறிவியல் கல்வியைத் தமிழ்மொழி மூலம் பெறுவதையும் (பக். 33, 35) பாரதியார் பாடல்கள் வழிநின்று உறுதிப்படுத்துகின்றார், கலைச்சொற்களை உண்டாக்கிக்கொண்டு தாய்மொழியில் தெ ட ங் க வேண்டும் என்பது, நீந்தக் கற்றுக்கொண்ட பிறகு நீரில் இறங்க வேண்டும் என்று எண்ணுவது போலாகும்' (ப. 33) எனச் சாட்டையடி தருகின்றார். புதுமுறைக் கல்வியைப் பற்றி பாரதியார் சிந்தித்ததாக ஊகம் செய்யத் ஆாண்டுகிறது (ப.42) என்று பேராசிரியர் தெரிவிக் றாா. பாரதியாரை வைணவச் செல்வராகப் பேராசிரியர் காண்கின்றார். வருணாசிரம தர்மத்தைப் பற்றிப் பாரதி யின் கண்ணன் கூறுவதைப்(நாலு குலங்கள் அன்மைத்தான்) படிக்கும்போது தந்தை ப்ெரியாரே கண்ணனாக நின்று பேசுல்து போல் (ப. 59) பேராசிரியர்க்குத் தோன்றுகிறது. "இயற்கை அன்னையை இயலும்போதெல்லாம் பாராட்டு வது-போற்றுவது-பார்தியிார்தம் அழுத்தமான சக்தி வழிபாட்டுக் கொள்கையைச் சார்ந்ததாகும்'(ப. 54) என்று ப்ேராசிரியர் தீர்மானிக்கிறார். கோள்களின் ஆய்வுகள்