உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 புதுவை (மை)க் கவிஞர் என்பருவம் என்றன்விருப்பம் - எனும் இவற்றினுக் கிணங்கவென் னுளமறிந்தே அன்பொடவள் சொல்லி வருவாள் - அதில் அற்புதமுண் டாய்ப்பர வசமடைவேன் என்ற பகுதியில் கண்னம்மாவின் கதை சொல்லும் போக்கைக் காணலாம். - கண்ணம்மா கவிஞருக்கு இந்த அகிலத்தின் தோற்றத் தினையே அழகாக எடுத்துக்காட்டிப் படைப்பின் விந்தை யில் பாலனின் மனத்தைப் பறிகொடுக்கச் செய்துவிடுகின் றாள். கதைப் போக்கிலேயே வான இயலையும் புவியியலை யும் பிற இயல்களையும் அற்புதமாகத் தெரிவிக்கின்றாள். அண்டகோள் இயல் அற்புதமாக விரித்துரைக்கப் பெறு கின்றது. விண்வெளியிலுள்ள பொருள்களை-காட்சிகளைஒவ்வொன்றாகக் காட்டுகின்றார். சந்திரன் என்றொரு பொம்மை - அதில் தண்ணமுதம் போலஒளி பரந்தொழுகும் மந்தை மந்தையாக மேகம் - பல வண்ணமுறும் பொம்மையது மழை பொழியும் முந்தஒரு சூரிய னுண்டு - அதன் முகத்தொளி கூறுதற்கோர் மொழி யிலையே. அம்புலி, முகில், பகலவன் இவற்றைக் காட்டிய கவிஞர் இந்தக் கோள்கட்கு மிகத் தொலைவிலுள்ள விண்மீன் களையும் காட்டுகின்றார்.