உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 புதுவை (மைக் கவிஞர் கொன்றிடும் என இனிதாம் - இன்பக் கொடுநெருப் பாய் அனல் சுவையமுதாய் நன்றியல் காத லுக்கே - இந்த ந்ாரியர் தமைஎனைச் சூழவைத்தாள். என்று காமச்சூட்டை எழுப்பும் நங்கையரைத் தந்த தையும் காட்டுகின்றார். அங்காடித் தெருவில் குழந்தை கட்குப் பல்வேறு அழகுடை பொம்மைகள் அடுக்கி வைத் திருப்பதைக் காண்கின்றோம். அங்ங்னமே, கண்ணம்மா வாகிய தாய் தனக்கு விளையாடுவதற்கு வைத்திருக்கும் விலங்குக் காட்சிச் சாலைகளையும், பொருட்காட்சிச் சாலைகளையும் காட்டுவார். இறகுடைப் பறவைகளும் - நிலந் திரிந்திடும் விலங்குகள் ஊர்வனகள் அரைகடல் நிறைந்திட வே - எண்ணில் அமைந்திடற் கரியபல் வகைப்படவே கறவுகள் மீன்வகைகள் - எனத் தோழர்கள் பலருமிங் கெனக்களித் தாள; நிறைவுற இன்பம்வைத் தாள் - அதை நினைக்கவும் முழுதிலும் கூடுவதில்லை. கவிஞரும் குழந்தை நிலையிலிருந்து கொண்டு அனைத் தையும் கண்டுகளிக்கின்றார். சற்றுப் பக்குவம் அடைந்த குழந்தைகளுக்குத் தருவது போல் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்கின்றாள் கண்ணம்மா. சரியான குழந்தைகள் பள்ளியின் ஆசிரியையாகத் திகழ்கின்றாள். அவள் தரும் பாடத் திட்டம் இது.