உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுப்பிரமணிய பாரதியார் : ஒரு கண்ணோட்டம் 63' விடுசத்த மாக்குகின்றான்: தாதியர் செய் குற்றமெல்லாம் தட்டி யடக்குகின்றான்; மக்களுக்கு வாத்தி, வளர்ப்புத் தாய், வைத்தியனாய் ஒக்கநயம் காட்டுகின்றான்; ஒன்றும் குறைவின்றிப் பண்டமெலாம் சேர்த்துவைத்துப் பால்வாங்கி மோர் வாங்கிப் பெண்டுகளைத் தாய்போல பிரியமுற ஆதரித்து நண்பனாய் மந்திரியாய் நல்லா சிரியனுமாய், பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய் எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி என்று சொன்னான் இந்தக் கூறுகளில் சிலவற்றை சில குடும்பங்களில் வீட்டு வேலைக்காக அமர்த்தப் பெறும் சில பணியாட்களிடம் காண முடிகின்றது. நாட்டுப் புறங்களிலிருந்து வரும் பணியாட்கள் சில ஆண்டுகள் இங்ங்னம் நல்ல முறையில் பணியாற்றுகின்றனர். நாளாக நாளாக நகரச் சாயம்? இவர்கள் மீது படியப் படியவே, பண்புகள் மாறுகின்றன. நகர கவர்ச்சிகள் இவர்களை ஆட்கொள்ளுகின்றன. எம்பெருமான் அடியார்க்கு எளியவனாக- ஏன், அடியவனாக- அமைகின்றான். இதனைக் கவிஞர் நன்கு உணர்கின்றார். அதனால்,