உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.சுப்பிரமணிய பாரதியார் : ஒரு கண்ணோட்டம் 87 பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள் ஒன்றே; அதனியில் ஒளியுறும் அறிவாம்; அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்; அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய் துவோம்." இதில் திருமால், சிவன், மகமது நபி, இயேசு இவர்கள் யாவரும் ஒரே பரம்பொருள் என்று குறிப்பிடுவதைக் காணலாம். அறிவே தெய்வம்', பரமசிவ வணக்கம்’, "நான்-என்ற பாடல்களிலும் பரம்பொருள் ஒன்றே என்ற கருத்தினைக் கண்டு மகிழலாம். பல்லாயிரம் பல்லாயிரம் கோடி கோடி அண்டங்கள் எல்லாத் திசையிலும் ஒர் எல்லை யில்லா வெளிவானிலே ! நில்லாது சுழன்றோட நியமம் செய்தருள் நாயகன் சொல்லாலும் மனத்தாலும் தொடரொ ணாத பெருஞ்சோதி” என்ற அல்லா'வைப் பற்றிய இந்தப் பாடல் பரம் பொருளுக்கும் பரஞ்சோதிக்கும் பொருந்துமாறு அமைந் துள்ளதைக் காணலாம். - எல்லாச் சமயங்கள் கூறும் மந்திர மொழிகள் யாவும் ஒரே பொருளினையே குறிக்கும் என்பது பாரதியாரின் தெளிந்த ஞானமாகும். இதனைக் கோவிந்தசாமியின் வாக்காக வெளியிடுகின்றார். 3. பா. க. புதிய ஆத்திசூடி-காப்பு 4. தோ, பா. 78. அல்லா-1