பக்கம்:புது டயரி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

புது டயரி



தான் இருக்கிறீர்களா? எங்கோ நண்பர் வீட்டுக்குப் போய் இட்டிலி பால் சாப்பிட்டு வரப் போயிருப்பீர்களாக்கும் என்றல்லவா எண்ணினேன்? உங்களுக்குப் பால் கீல் ஒன்றும் வேண்டாமா?”

“சரி வருகிறேன்” என்று சொல்லிப் புறப்பட்டேன். இப்போதுதானே விடிந்திருக்கிறது? இப்போதே டயரியை எழுத முடியுமா? ஒரு நாள் நிகழ்ச்சி முழுவதையும் நினைவுக்குக் கொண்டுவந்து மாலையிலோ இரவிலோ எழுதுவதுதான் முறை.

போய்ப் பால் குடித்தேன். மற்றக் காரியங்களைப் பார்த்தேன்.

அன்று அலுவலகத்துக்கு விடுமுறை. ஜனவரி முதல் தேதியல்லவா? ‘அடடா இதையும் குறித்திருக்கலாமே?’ என்று உள்ளே போய் டயரியை எடுத்து, ‘இன்று அலுவலகத்துக்கு விடுமுறை’ என்று எழுதிவிட்டு வந்தேன் பிறகு அன்று சில நண்பர்களைப் பார்க்கப் போயிருந்தேன். போன இடங்களில் பழம் கிடைத்தது; பால் கிடைத்தது. ‘இங்கே எனக்குப் பழம் பால் கிடைத்தது’ என்று ஒரு சிலேடையை உதிர்த்து வைத்தேன்.அப்போதெல்லாம் என் ஞாபகம் என் டயரியிலேயே இருந்தது. டயரியில் இந்தச் சிலேடையையும் எழுத வேண்டும் என்று நினைவில் வைத்துக் கொண்டேன்.

மயிலாப்பூர்க் கபாலீசுவரர் கோயிலுக்குப் போய்ச் சுவாமி தரிசனம் செய்துகொண்டேன். என்னுடைய பிரார்த்தனைகளில், ‘என்னுடைய டயரி இனிது நிறைவேற வேண்டும்’ என்பதையும் சேர்த்துக் கொண்டேன்.

வீட்டுக்கு வந்து உணவு கொண்டேன். பிறகு சிறிது இளைப்பாறினேன். அப்பால் என்னைப் பார்க்கப் பல நண்பர்கள் வந்தார்கள். அவர்களில் ஒரு நண்பர், “இந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/11&oldid=1149388" இலிருந்து மீள்விக்கப்பட்டது