பக்கம்:புது டயரி.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



என் புத்தகங்கள்

யாராவது ஒர் அறிஞரைப் பார்த்துச் சிறிது நேரம் பேசி அவருடைய அறிவுரையைக் கேட்டு வரலாம் என்று நினைக்கிறோம். அவர் வீட்டுக்குப் போகிறோம். அவர் இருக்கிறதில்லை. இருந்தாலும் வேலை அதிகமாக இருப்பதானனால், “அப்புறம் வாருங்கள்” என்று சொல்லிவிடுகிறாா். இன்னும் சில நண்பர்களை நாம் நினைத்த நேரத்துக்குப் பார்க்க முடிகிறதில்லை.

ஆனால் வேறு சில பெரியவர்கள் இருக்கிறார்கள்; அவர்கள் இப்போது இல்லை என்றாலும், இருந்துகொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களை எந்த நேரத்தில் கூப்பிட்டடாலும் வருவார்கள். நம்மோடு பேசுவார்கள். நமக்கு அறிவுரை தருவார்கள். அவர்கள் யார் தெரியுமா? திருவள்ளுவர், கம்பர், ஷேக்ஸ்பியர், மில்ட்டன், காளிதாசர் முதலியவர்கள். அவர்களை உடம்புடன் பார்க்க முடியாது என்பது உண்மைதான். நாம் என்ன, அவர்களோடு கை, குலுக்கப் போகிறோமா? சாப்பாடு போடப் போகிறோமா? அல்லது உட்கார்த்தி வைத்து விசிறி வீசப் போகிறோமா? அவர்கள் யாவரும் தம்முடைய நூல்களில் வாழ்கிறார்கள். அவர்களே அந்த நூல்களின் வடிவத்தில் இருக்கிறார்கள். அவர்களை எப்போது வேண்டுமானாலும் அணுகலாம். அலுப்புத் தட்டினால் ‘கொஞ்சம் இருங்கள்’ என்று கூறி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/116&oldid=1152375" இலிருந்து மீள்விக்கப்பட்டது