பக்கம்:புது டயரி.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

புது டயரி

 முஸ்லிம் உடை அணிவித்தார்கள்; குல்லாப் போட்டார்கள்; இந்துவைத் தம்முடைய மதத்துக்கு மாற்றினார்கள். இந்த மாற்றத்தையே குல்லாப் போடுதல் குறிக்கிறது. அவ்வாறே முஸ்லிமாக இருந்த ஒருவரை இந்துவாக்கி அவர் காதில் துளையிட்டுக் கடுக்கன் போட்டார்கள். முஸ்லிம்களில் ஆடவர்கள் காது குத்திக் கொள்வதில்லை. ஆகவே அவர்களை இந்துக்கள் ஆக்கும்பொழுது மதம் மாறியதற்கு அடையாளமாகக் காது குத்தினார்கள். மத மாற்றத்துக்கு அறிகுறிகளான குல்லாப் போடுவதும் காது குத்துவதும் மனத்தை மாற்றச் செய்யும் முயற்சியைக் குறிப்பவையாகப் பிற்காலத்தில் வந்துவிட்டன.

பூச்சாண்டி என்ற சொல்ல நாம் அடிக்கடி குழந்தைகளிடம் சொல்லிப் பயமுறுத்துகிறோம். அதுகூட மதமாற்ற முயற்சியிலிருந்து வந்த வார்த்தைதான். பூச்சு என்றால் திருநீறு பூசுவதைக் குறிக்கும்; திருநீறு பூசுபவர் ஆண்டி; அவரே பூச்சாண்டி. சைவர்கள் பலம் பெற்றிருந்த காலத்தில் சைனர்களையும் வைணவர்களையும் மதம் மாற்றித் திருநீறு பூசச் செய்தார்கள். அப்படிச் செய்த சைவர்களை மற்றவர்கள் பூச்சாண்டி என்று சொன்னார்கள். இப்போது சைவர்களே தம் குழந்தைகளுக்குப் பூச்சாண்டி காட்டுகிறார்கள்! எப்படி அந்தச் சொல் வந்ததென்று யோசித்தால் அதைச் சொல்வார்களா?

வைஷ்ணவர்கள் மற்றவர்களை மதமாற்றம் செய்த போது அவர்களுக்கு நாமம் போட்டார்கள். அதையே இப்போது, “என்ன, அவனுக்கு நாமம் போடுகிறாயா?” என்று மனம் மாற்றி ஏமாற்றும் செயலைக் குறிக்கச் சொல்லுகிறோம்.

இவையெல்லாம் அந்தக் காலத்தில் மதம் மாற்றிய முயற்சிகளைக் குறிப்பவை. அந்த முயற்சிகள் மாறி அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/155&oldid=1153039" இலிருந்து மீள்விக்கப்பட்டது