பக்கம்:புது டயரி.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேசத் தெரியாதவர்களும் தெரிந்தவர்களும்

207

 தோடா, பொன்னாடை முதலியவற்றையெல்லாம் வைத்துக் கட்ட இது உபயோகமாக இருக்கும் என்ற எண்ணத்தைத்தான் சொன்னோம். எவ்வளவோ அருமையான துப்பாட்டாக்களை யெல்லாம் வாங்கியிருப்பீர்களே! அவற்றைக் கட்டுவதற்குச் சாமான்யமான ஆடை ஒன்று வேண்டாமா?” என்றபோதுதான் தேசிகருடைய சாதுர்யம் அங்கிருந்த யாவருக்கும் புலப்பட்டது.

ஒருவன் வீட்டில் தன் மனைவி உணவு படைக்க உண்ணுகிறான். அப்போது கடுக்கென்று கல் அகப்படுகிறது. கோபத்தால், “என்ன இப்படிக் கல்லப் போட்டிருக்கிறாய்?” என்றால் அந்தப் பெண்மணி முகம் வாடி விடும். அவள் கண்ணில் நீர் துளிக்கும்.

சுவையாகப் பேசுகிறவன் ஒருவன் அத்தகைய சந்தர்ப்பத்தில் என்ன சொன்னான் தெரியுமா! “ஆஹா! அந்தக் காலத்தில் அநசூயை நாரதர் கொடுத்த இரும்புக் கடலையை வறுத்துத் தந்தாளாம். நீ கல்லையே சமைத்து விடடாயே!” என்றான். அதைக் கேட்ட அந்தப் பெண்மணி புன்முறுவல் பூத்து, “போங்கோ” என்று கூறி, தலையைத் திருப்பிக் கொண்டாள். அப்போது அந்த முகத்தில் நாணமும் மலர்ச்சியும் விரிந்தன.

இரண்டு ஆடவர்களும் சொன்ன கருத்து ஒன்றுதான்; உணவிலே கல் இருக்கிறது என்பதைத்தான் இருவரும் சொன்னார்கள். ஆனால் முன்னவன் சொல்லையே கல்லாகப் போட்டான். பின்னவனோ கல்லையே குழைத்துச் சுவை ஊட்டிவிட்டான். அவனல்லவா பேசத் தெரிந்தவன்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/214&oldid=1153450" இலிருந்து மீள்விக்கப்பட்டது