பக்கம்:புது டயரி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

புது டயரி



கால உணவாகிக்
கைப்பிசைய நல்லதாய்ப்
பாலருந்தி வேண்டாத
பான்மையால்-சீலமிகு
சீதா பதிஎன்னும்
செம்மலே, காபியினை
ஒதாய் பழையதென்று.

காபிக்கு கால உணவாகி – காலையில் அருந்தும் உணவாகி, கைப்பு இசைய நல்லதாய் – கசப்புப் பொருந்த அதனால் நல்ல காபி என்று சொல்வதாய், பால் அருந்தி - பாலை அருந்தும் நான், வேண்டாத பான்மையால் – விரும்பாத இயல்பினால், சீலமிகு – குணத்திலே மிக்க, சீதாபதி என்னும் செம்மலே – சீதாபதி என்னும் பெயரை உடைய கனவானே, காபியினை ஒதாய் பழையது என்று – காபியினைப் பழையது என்று சொல்க.

பழையதுக்கு : காலை உணவாகி – காலையில் உண்னும் உணவாகி, கை பிசைய நல்லதாய் – கையினால் பிசையப் பிசைய நல்லதாகி, பாலர் உந்தி – இளம்பிள்ளைகள் வெறுத்துத் தள்ளி, வேண்டாத பான்மையால் – விரும்பாத இயல்பினால். (மற்றப் பகுதிகளுக்கு முன் சொன்னபடியே பொருள் கொள்க.)

“கைப்பு இசைய நல்லதாய் என்று சொன்னிர்களே, காபியை உண்டவர்களுக்குத்தான் அந்த அருமை தெரியும்; உங்களுக்கு எப்படித் தெரிந்தது?” என்று ஓர் அன்பர் கேட்டார்.

“நான் ஒரு காலத்தில் சாப்பிட்டதுண்டு. காபிக் காதலர்கள் டிகாக்ஷன் குறைவாக இருந்தால் கசப்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/57&oldid=1149584" இலிருந்து மீள்விக்கப்பட்டது