பக்கம்:புது மெருகு.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

புது மெருகு

போது மற்றொரு பால் நிலவொளியைத் தருவதை நீங்கள் பார்த்ததில்லையா? நல்ல சமயம் வரட்டும் என்று நான் பார்த்துக் கொண்டிருந்தால் அது வரைக்கும் என் வறுமை என்னை விடாதே. அவரை பதமாகு முன்பே கடுகு பொடியாகிவிடுமே! அது கிடக்கட்டும். சம்பந்தச் சர்க்கரை யார் என்பதைத் தெரிவிக்க மாட்டீர் களா?" என்று புலவர் சொல்லி அந்தக் கருத்தையே ஒரு பாடலாகவும் பாடினார்.

"எவரையென்று நாம் அறியோம் இரப்பவனோ
இடமறியான் இரவில் ராகு
கவருமதி யொருபுறத்தே நிலவெறிக்கும்
பான்மைதனைக் கண்டி லீரோ
அவரைபத மாகுமுனம் கடுகு பொடி
ஆகிவிடும் அதனை யோர்ந்து
துவரைமுதல் காதலனாம் சம்பந்தச்
சர்க்கரையார்? சொல்லுவீரே."

[துவரைமுதல் காதலன் - துவாரகாபுரி வாசியாகிய கண்ண பிரானிடத்துக் காதலுடையவன்.]

பாட்டுப் புறப்பட்டதைக் கேட்டவுடனே அவர் கள் தங்கள் பரிகாசத்தை விட்டுவிட்டுப் புலவருக்கு மரியாதை செய்தார்கள். பிறகு தனியே ஓரிடத்தில் சிந்தனையுள் மூழ்கியிருந்த சம்பந்தச் சர்க்கரையிடம் கொண்டுபோய் விட்டார்கள்.

புலவன் கண்ணைக் கொட்டாமல் அவரைப் பார்த் தான். பார்க்கவேண்டும் பார்க்கவேண்டும் என்று ஆர் வம் கொண்டு தவங்கிடப்பதற்குக் காரணமான வள் ளலை, நற்கலையில்லாத மதிபோல் நகையிழந்த முகமும் வாடிய மேனியுமாகக் கண்டான். சர்க்கரை வள்ளல் எழுந்து உபசரித்தார். "இந்த நிலையிலே தங்களைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/105&oldid=1549614" இலிருந்து மீள்விக்கப்பட்டது