பக்கம்:புது மெருகு.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சில குறிப்புகள்

123

ப.29 கபிலர் பாடல்:

அளிதோ தானே பேரிருங் குன்றே
வேலின் வேறல் வேந்தர்க்கோ அரிதே
நீலத்து இணைமலர் புரையும் உண்கட்
கிணைமகட் கெளிதாற் பாடினள் வரினே.
                              —புறநானூறு,111

ப. 30. கபிலர் கிளிகளை வளர்த்து நெல்லைக் கொண்டுவரச் செய்தார் என்ற செய்தியைப் பின்வரும் செய்யுட் பகுதிகள் புலப்படுத்துகின்றன:

உலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்லிசை
வாய்மொழிக் கபிலன் சூழச் சேய்நின்று
செழுஞ்செய்ந் நெல்லின் விளைகதிர் கொண்டு
தடந்தாள் ஆம்பல் மலரொடு கூட்டி
யாண்டுபல கழிய வேண்டுவயிற் பிழையாது
ஆளிடூஉக் கடந்து வாளமர் உழக்கி
ஏந்துகோட் டியானை வேந்தர் ஓட்டிய
கடும்பரிப் புரவிக் கைவண் பாரி.

                 —நக்கீரர் பாட்டு - அகநானூறு, 78.

புலங்கந் தாக இரவலர் செலினே
வரைபுரை களிற்றொடு நன்கலன் ஈயும்
உரைசால் வண்புகழ்ப் பாரி பறம்பின்
நிரைபறைக் குரீயீஇனம் காலைப் போகி
முடங்குபுறச் செந்நெல் தரீஇயர் ஓராங்
கிரைதேர் கொட்பின வாகிப் பொழுதுபடப்
படர்கொள் மாலைப் படர்தந் தாங்கு.
            —ஔவையார் பாட்டு - அகநானூறு, 303.

யமன் வாயில் மண்

இவ்வரலாற்றுக்கு ஆதாரமான பாட்டு வருமாறு:
திணை - வஞ்சி, துறை - துணைவஞ்சி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/128&oldid=1549653" இலிருந்து மீள்விக்கப்பட்டது