பக்கம்:புது மெருகு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

புது மெருகு

யாரேனும் வந்தால் கொண்டுவரலாம். அத்தகையவர்களை நம் பகைவர்கள் அணுகவிட மாட்டார்களே !" என்று சந்தேகத்தோடு கேட்டான் பாரி.

"பகைவர்களுடைய கட்டுக்கும் காவலுக்கும் பறம்புமலை நெகிழாது. இங்குள்ள நாமும் பணியோம். அவர்கள் செருக்கை அடக்க இம்மலையில் வாழும் நம் நண்பர்களை அனுப்ப எண்ணியிருக்கிறேன். அவர்கள் கீழே நாட்டுக்குச் சென்று நெற்கதிர்களைக் கொணர்ந்து நமக்குக் கொடுப்பார்கள்"

"தாங்கள் சொல்வது விளங்கவில்லை. நம்முடைய அன்பர்களுக்குப் பகைவர்கள் வழி விடுவார்களா?"

"அவர்கள் வழி விட வேண்டாம். கடவுள் வழி விட்டிருக்கிறார் . அந்த வழியை அடைக்கப் பிரமதேவனாலும் இயலாது." "அந்தணர் பெரும, தங்கள் வார்த்தைகள் எப்பொழுதும் பொய்யானதில்லை. கருத்தில்லாத சொற்கள் தங்கள் வாக்கில் வருவதும் இல்லை. ஆனால் இந்த மொழிகளை என் காது கேட்டும், அவற்றினுள் அடங்கிய கருத்தை உணர்ந்துகொள்ளும் ஆற்றல் என் பேதை அறிவுக்கு இல்லை."

"நான் உறுதியாகச் சொல்கிறேன். இன்னும் சில நாட்களில் நாம் இறைவனுக்கு நெல்லஞ் சோற்றை நிவேதிக்க முடியும்' அந்தப் பிரசாதத்தை நாம் உண்ணலாம். குடிகளும் ஓரளவு சுவை காணச் செய்யலாம், பொறுத்திருந்து பார்த்தால் தெரியும்."

மாதங்கள் கடந்தன. ஒரு நல்ல நாள்; அன்று பறம்புமலையிலுள்ள திருக்கோயிலில் இறைவனுக்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/31&oldid=1548626" இலிருந்து மீள்விக்கப்பட்டது