பக்கம்:புது மெருகு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

புது மெருகு

ஆயிரமாகக் கொடுத்தாலும் அவர்கள் மகிழ மாட்டார்கள். தரம் அறிந்து பாராட்டும் வள்ளல்களையே அவர்கள் தேடுவார்கள். தம்முடைய கவிதையின் நயத்தை அறிந்து இன்புற்றுப் பாராட்டி அவர்கள் அளிக்கும் பரிசில் எவ்வளவு சிறியதானாலும் பெரு மகிழ்ச்சியோடு பெற்றுக்கொள்வார்கள். நலங்கிள்ளி வரிசை யறிபவர்களிற் சிறந்தவன். இனிய கவிதையைக் கேட்பதிலும், அக்கவிதையின் தரந்தெரிந்து பாராட்டுவதிலும், நல்ல கவிஞர்களை நாட்டுக்கு அணியாக எண்ணிப் போற்றி வழிபடுவதிலும் யாருக்கும் இளையாதவன். இது தமிழ் உலகம் அறிந்த செய்தி. இளந்தத்தன் அவன் புகழைப் பலரும் சொல்லக் கேட்டுத்தான் அவன்பால் வந்தான். வந்தது வீண் போகவில்லை. வீண் போவதா? புலவன் தான் நினைத்ததற்குப் பல மடங்கு அதிகமான பரிசிலைப் பெற்றான்; பாராட்டைப் பெற்றான்; எல்லாவற்றையும் விட, 'இனி எங்கும் உலாவித் தமிழ் பரப்பலாம்' என்ற தைரியத்தைப் பெற்றான்.

சிலநாள் நலங்கிள்ளியின் உபசாரத்தில் பொழுது போவதே தெரியாமல் இருந்த இளந்தத்தன், "தமிழ் நாட்டின் விரிவை அளந்தறிய விடை கொடுக்க வேண்டும்" என்று சோழனிடம் தெரிவித்தான். வரும் புலவரை வாவென்று சொல்லத் தெரியுமேயன்றிப் போகும் புலவர்களைப் போவென்று சொல்லத் தெரியாது அவனுக்கு.

"அடிக்கடி வரவேண்டும் என்னை மறவாமல் இருக்கவேண்டும். உலக முழுவதும் புலவர்களுக்கு ஊர். ஆனாலும் இந்த இடத்திலே தனிப்பற்று இருந்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/39&oldid=1548636" இலிருந்து மீள்விக்கப்பட்டது