பக்கம்:புது மெருகு.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



தேவரும் குருவும்

"சிருங்கார ரசம் இருந்தால்தான் காவியம் சோபிக்கும்"என்றார் ஒரு புலவர்.

"வடமொழியில் எவ்வளவோ காவியங்கள் இருக் கின்றன. தமிழில் இல்லை. சில காவியங்கள் இருந்தா லும் நன்றாக அமையவில்லை" என்றார் அவருடைய அருகில் இருந்த மற்றொரு புலவர். "நல்ல கவிஞர்கள் தமிழில் இல்லையா? ஏன் புதிய காவியங்களைப் பாடக் கூடாது?"

"புலவர்கள் இல்லாமல் என்ன? இப்பொழுது நம்முடன் பழகும் திருத்தக்க தேவர் நல்ல வாக்கு வன்மையுடையவர். சிறந்த புலவர். அவர் எதையும் பாடலாம்."

"போயும் போயும் ஒரு ஜைனத் துறவிதானா உம் முடைய கண்ணிற் பட்டார்! ஜைனர்களுக்குத் துறவைப்பற்றிப் பாடத் தெரியுமே யல்லாமல் இன்பச் சுவை என்ன தெரியும்?"

"அப்படிச் சொல்லக் கூடாது. துறவியாக இருப்ப தனாலேயே இன்பச் சுவையைப்பற்றிப் பாடும் வன்மை இராதென்று கொள்வதற்கில்லை. அவர்களால் இன்பச் சுவையை உணரமுடியாதா? காவியங்களைப் படித்தால் அறிய மாட்டார்களா? துறவுள்ளம் பற்றற்றது. எதனையும் உள்ளவாறே உணரக் கூடியது."

இவ்வாறு பேசிச் சில புலவர்கள் திருத்தக்க தேவருக்கு ஊக்க மூட்டி விட்டார்கள். அவர்களுடைய தூண்டுதலால் சீவகனுடைய சரித்திரத்தைக் காவிய-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/71&oldid=1549174" இலிருந்து மீள்விக்கப்பட்டது