பக்கம்:புது மெருகு.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேவரும் குருவும்

71

கண்ணால் பார்க்கும் குண வருணனை. இதுதான் அழகு. இவன் பேரறிஞன். குருவுக்கு மிஞ்சின சிஷ் யன்' என்று பலவாறு அவர் மனத்துள் யோசனை படர்ந்தது.

சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்திருந்தார். பிறகு மௌனத்தினின்றும் கலைந்து, "தேவா, ஒன்று சொல் கிறேன்; அப்படிச் செய்" என்று சொன்னார். அந்த வார்த்தைகள் அவர் உள்ளம் உருகி வந்தன என் பதைத் தொனியே குறிப்பித்தது.

"தேவரீர் கட்டளைக்குக் காத்திருக்கிறேன்."

"உன்னுடைய செய்யுளை முதலிலே வைத்து அதனை அடுத்து இரண்டாவதாக என் செய்யுளை வை.:

திருத்தக்க தேவர் திடுக்கிட்டுப் போனார். தம் ஆசிரியர் ஏன் அப்படிச் சொல்லுகிறார் என்பது விளங்கவில்லை; மயங்கினார்.

"என்ன யோசிக்கிறாய்? நீ இயற்றிய சித்த சரணத்தை முதற் பாட்டாக அமைத்துக்கொள்" என்று மீட்டும் முனிவர்பிரான் கனிவு ததும்பக் கூறினார்.

"அது சம்பிரதாய விரோதமாயிற்றே. அப்படிச் செய்தால் இரண்டு வகையில் நான் குற்றவாளி ஆவேனே!"

"இல்லை; அதைத்தான் முதலில் வைக்கவேண்டும்."

"குருநாதருடைய செய்யுளுக்குத் தலைமை அளிக் காத குற்றமும், அருக சரணத்திற்குப் பின் வைக்க வேண்டியதை முன் வைத்த குற்றமும் என்னைச் சாருமே!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/76&oldid=1549181" இலிருந்து மீள்விக்கப்பட்டது