பக்கம்:புது மெருகு.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

‘மூங்கிலிலை மேலே’

மாலை வேளை. கவிச் சக்கரவர்த்தியாகிய கம்பர் மாலையில் வீசும் தண்ணிய தென்றலின் இனிமை யையும், அந்தி வானத்தின் அழகையும், இயற்கைத் தேவி தன்னுடைய குழந்தைகளுக்கு ஓய்வு கொடுத்துத் தாலாட்டும் கங்குற் கன்னியை வரவேற்கும் கோலத் தையும் பார்த்து மகிழப் புறப்பட்டார். வயலோரங் களில் சோலை படர்ந்த நிலப்பரப்பிலே தம்முடைய கண் பார்வையை விரியவிட்டுப் பார்த்துக்கொண்டே சென்றார்.

அவர் காதில் கணீரென்று ஒரு தமிழ்ப் பாட்டு விழுந்தது. வயல் பக்கத்திலிருந்து வந்த அந்த இன் னோசையைத் தொடர்ந்து அங்கே சென்றார். வயலுக்கு இருவர் ஏற்றத்தால் நீர் இறைத்துக்கொண்டிருந் தார்கள். ஏற்றக்காரன் அந்தக் குளிர்ந்த வேளையில் ஸ்வரம் ஏறிய தொண்டையோடும், வீட்டுக்குப் போக வேண்டும் என்ற உற்சாகத்தோடும் பாடிய பாட்டுத் தான் கம்பரை அங்கே இழுத்துச் சென்றது. காவிரி பல கரல்களில் ஓடி வயல் வளம் பெருக்கும் சோழ நாட்டிலே இந்த ஏற்றக் காட்சிகளை அவர் அதிகமாகப் பார்த்ததில்லை. இது பாண்டி நாடு. ஏற்றத்தின் எழிலைக் கண்டு களித்ததோடு ஏற்றக்காரன் பாட்டிலே தம் மனம் செல்ல அங்கே நின்றார். இலக்கியப் பூம் பொய்கையிலே ஒருதனியே ஓங்கிய தாமரை மலரைப் போன்ற காவிய ரத்தினத்தை உலகுக்கு அளித்த அந்தக் கவிப் பெருமான், வாழ்க்கையோடு ஒட்டி வரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/79&oldid=1549287" இலிருந்து மீள்விக்கப்பட்டது