பக்கம்:புது மெருகு.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

புது மெருகு

கொள்ளவேண்டும். நாவைக் கொண்டு பிழைக்கும் கூட்டத்தை நாம் சேர்ந்திருந்தாலும் கூலி வேலை செய்து பிழைக்கும் தொழிலாளர்கள் எப்படி ஜீவனம் செய்கிறார்கள் எனபதை அநுபவத்தால் உணரவேண்டும். அதற்கு ஏற்ற சந்தர்ப்பம் இதோ வாய்த்திருக்கிறது. நம்முடைய வேஷம் குலைவது இன்றோ நாளையோ தெரியாது. அதற்குள், இந்த அருமையான சந்தர்ப்பத்தை நழுவவிடாமல் சோதனை செய்து விட வேண்டும். நம்முடைய உடம்பு வணங்கி வேலை செய்து இந்த ஒரு சாண் வயிற்றுக்குக் கஞ்சி பெற்று வாழ முடியுமா? பார்த்து விடவேண்டும்' என்று அவர் சிந்தனை சென்றது.

அவரைக் கவிஞர் என்று அறிந்துவிட்டால் ஊரினர் சும்மா விடுவார்களா? அப்பால் அவர் இஷ்டப்படி போக முடியுமா? வர முடியுமா? பட்டினி கிடக்க முடியுமா? நடக்க முடியுமா? வாழ்க்கையில் அரிய அநுபவங்களைப் பெறும் சந்தர்ப்பங்கள் சில, யாவருக்கும் கிடைக்கின்றன. ஆனால் அந்த அநுபவங்களால் பயன் அடைபவர்கள் மிகச் சிலரே. கம்பர் உலகைத் தம்முடைய கவிதைக் கண்களால் நோக்கி, ஒவ்வொரு கணத்திலும் புதிய புதிய உணர்ச்சிகளைப் பெறுபவர். உலக அரங்கில் உலவும் மக்களின் உணர்ச்சிகளை ஊடுருவிப் பார்த்து, அவர்கள் செயல்களை அறிந்து வியப்பவர். மற்ற மனிதர்களின் வாழ்க்கையைக் கண்டு அதைத் தம் கற்பனைக்குக் கருவியாக்கும் அப் பெரும் புலவர், இப்போது தம்முடைய வாழ்க்கையிலே ஒரு சிக்கலான நிலையில் நின்றார். சக்கரவர்த்தியின் அவைக்களப் புலவராக இருந்தவர் பழக்கமில்லாத மக்களிடையே யாரோ அயலார்போல் நடக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/89&oldid=1549352" இலிருந்து மீள்விக்கப்பட்டது