பக்கம்:புது வெளிச்சம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

செலவும் சிரமங்களும் என அறியாது பகல் கனவில் அரசனையும் மக்களையும் இருக்கவைத்து விட்டு வேறு ஏமாந்த மன்னர்களுக்கு அவர்கள் வலைவீச சென்று சேர்வர். இதுதான் இந்து மதத்தின் இந்து அரசர்களின் பண்டைக்காலத்தின் சாதனைகள். குதிரைகள் வாங்கி வர அரசன் பணம் கொடுத்து அனுப்பினால் பிராமண மந்திரி துரமான இடம் போய்ச் சேர்ந்து சிவனுக்குக் கோயில் கட்டிக் கொண்டாடி விட்டு வந்த நிகழ்ச்சிகளும் கூட இந்தத் தமிழ்நாட்டில் வரலாறு நிகழ்ச்சியாக உள்ளது. யாகம் செய்வது, கோயில் கட்டிக் கொண்டாட்டம் போடுவது தவிர நாடும், மக்களும் என்ன ஆகிறார்கள் என்ற பிரச்சனைக்கே இவர்கள் இடம் கொடுக்கவில்லை. அப்படி வேறெதுவேனும் இருந்திருந்தால் ஒரு அரசனுடன் இன்னொரு அரசனைச் சண்டைக்குத் தயார் செய்வது; சாவதற்குக் களம் கோலுவதாகவே ஆகும்.

அரைக்குடம் தழும்புவதைப் போல வேலையில்லா இவன் காலத்துக்குதவாத விவகாரத்தை இழுத்துப் போட்டுக் கொண்டு என்னவெல்லாமோ கிறுக்குகிறான் என்று யாரும் ஆராயாது என்னைப் பற்றி முடிவுகட்டிவிட வேண்டாம். நான் மட்டும் அல்ல, ஒவ்வொரு அறிஞனும் ஒவ்வொரு காலத்தில் இந்த அவல ஆண்டவன், அவல மதச் சடங்குகளைப் பற்றியும் கண்டித்துக் களைந்தெறிய முயன்றிருக்கிறான் என்பதற்கும் ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.

வேதகாலத்திலிருந்தே உபநிசத்துக்களை மறைத்து வைத்துவிட்டு, ஒவ்வொரு உண்மைக்கும் வேறு போலி உண்மையைப் பொருத்தி உண்மைபோல் காட்டி ஆரியரல்லாத மக்களை நாசம் செய்வதை முதலில், அதாவது வேத காலத்திலேயே எதிர்த்தவர் பிரகஸ்பதி என்று 1982 ஜனவரி 'கஸ்தூரி' பக்கம் 87ல் 'பழமையான பாரதத்தில் தார்மீக எதிர்ப்புகள்' என்ற தலைப்பில், ஆர்.டி.எக்டே என்பவர் இந்த எதிர்ப்புகளைப் பற்றிக் கட்டுரையில் விவரிக்கிறார். 'ருக் வேதத்திலேயே இதற்குரிய குறிப்புகள் உள்ளதெனவும்' அவர் எடுத்துக் கூறுகின்றார். அதில் முதல் பாராவின் கடைசி வாக்கியம் இது : இவ்வாறு உண்மைக்கு மாறுபட்டு ஜாதி மதங்களைப் பிரிவினை செய்து ஏமாற்றுகிற வேதியர்களை எதிர்த்துப் பிரசாரம் செய்தவர்கள் மூன்று பிரிவில் அடங்குவர். முதலில் எதிர்ப்பு

104 <

கவிஞர் வெள்ளியங்காட்டான்