உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புது வெளிச்சம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குடிகொண்டிருக்கிறேன். என்னைப் போன்றவர்களே மற்றும் என்னோடுள்ள மற்ற எல்லா மனிதர்களும், எனக்கு எது வேண்டுமோ, அது மற்ற எல்லோருக்கும் வேண்டும். எனக்கு எது கேடுசெய்கிறதோ அது மற்றவர்களுக்கும் கேடே செய்யும் என்ற ஆன்மீக ஞானம், அதாவது தன்னையறிந்து கொள்பவனாகிறான். தன்னை அறிந்தவன் மற்றவர்களையும் அறிந்தவனாகிறான். தலைவனையும் (தெய்வம்) அறிந்து கொண்டவனாகிறான். எனவே, 'பிரம்ம விதாப்நோதி பரம்' பிரம்மத்தை அறிந்தவன் பிரம்மமாகிறான். என்று உபநிசத்து இங்கு நமக்கு விளக்கமாகிறது. நம்முடைய அறியாமை, அச்சம் அகற்றவும் செய்கிறது. அறிய வேண்டியதை அறிந்தவன் அடைய வேண்டியதை அடைந்தே தீருகிறான்.


❖ புகழ்ச்சியே அறியாமையின் குழந்தை. ஆம்,
  அறியாமையின் குழந்தைதான் புகழ்ச்சி.
பென்ஜமீன் பிராங்ளின்

❖ கவிதை என்பது ஆத்மாவின் ரகசியம். அதை வெறும்
  வார்த்தைகளைக் கொண்டு உளறுகிறார்கள்.
-கலில் இப்ரான்

❖ ஆசைவசப்பட்டவனின் உள்ளம் மாசைப் பூசிக் கொள்ளும்.
- வெ.

❖ மக்கள் வாக்கு வேர்கள், கவிஞனின் வாக்கு மலர்கள்.
- ஸ்ரீகண்டய்யா

❖ கல்மனம் உள்ளவர்கள் ஏழைகளாவதில்லை. ஏனெனில்
  அவர்களை மொட்டை அடிக்க கடவுளாலும் முடியாது.

- பம்பன்னா

8 ᗛ

கவிஞர் வெள்ளியங்காட்டான்